என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
- 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்
- முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வேலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கியது.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண் ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 7,613 எழுதினர்.
தேர்வு நடைபெற்ற அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். தேர்வுக்கு முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக தேர்வு மைய நுழைவாயிலில் முழுமையாக சோதனை செய்த பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் பென்சில் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.
இன்று பிற்பகல் பொதுப் பிரிவினருக்கு மட்டும் 70 மதிப்பெண்ணுக்கான பொதுஅறிவு மற்றும் உளவியல் தேர்வு நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து நாளை போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது.
இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர். இன்று வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தில் நடந்த தேர்வில் வேலூர் சரக டிஐஜி முத்து சாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்ப்பார்வையில் 3 ஏ.டி.எஸ்.பி.கள், 5 டி.எஸ்.பி.கள், போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு பணியில் ஈடுப்பட்டனர்.






