என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,814 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,113 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கடைகளை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் பள்ளிகொண்டா பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் கடைகள் திறக்க புதிய நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர்த்து அனைத்து வகையான கடைகளும் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.
இந்த உத்தரவு மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள், நகைக்கடைகள், பேக்கரி, ஹோட்டல்கள், தேநீர் கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர் கடைகள் என அனைத்துக் கடைகளுக்கும் பொருந்தும்.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் மற்ற அனைத்து வகையான கடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

கே.வி.குப்பத்தில் ஓட்டல்,கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் ஊரடங்கு சீராக நடைபெறுகிறதா? என்று போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கே.வி.குப்பம் பஸ்நிலையம், மேல்மாயில் ரோடு பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டு இருந்த ஓட்டல்கள், சிக்கன் கடை உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அடுக்கம்பாறை:
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சிறப்பு வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருப்பத்தூர் டவுன் செட்டித்தெருவை சேர்ந்தவர் சையது ரபிக்அகமது (வயது 62). இவர் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்பாடி தாலுகா கழிஞ்சூரை சேர்ந்த கண்ணன் (49) கடந்த 8-ந் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடியாத்தம் டவுன் போடிப்பேட்டையை சேர்ந்த மல்லிகேஸ்வரி (வயது 64) என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடல் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினரால் குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் மோகனாம்பாள் (82). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது உறுதியானது.
அதைத்தொடர்ந்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தனிவார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 42 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். இந்த நிலையில் 3 பேர் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்கள் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

குடியாத்தம், குரிசிலாப்பட்டில் 3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி மற்றும் கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் 2 பேர், போக்குவரத்துப் போலீஸ் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர், போலீஸ் ஜீப் டிரைவர் எனக் காவல் துறையினர் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நெல்லூர்பேட்டையில் 55 வயது ஆண், 55 வயது பெண், தாழையாத்தத்தில் 50 வயது ஆண், காமாட்சிஅம்மன் பேட்டையில் 71 வயது மூதாட்டி, சந்தப்பேட்டையில் 61 வயது மூதாட்டி, 42 வயது ஆண், 9 வயது சிறுவன், 46 வயது ஆண், 16 வயது ஆண், 39 வயது ஆண், 57 வயது ஆண், பிச்சனூர் காளியம்மன்பட்டியில் 13 வயது ஆண், கங்காதர சாமி மடாலயத் தெருவில் 22 வயது ஆண், புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் 8 வயது சிறுமி, ராஜா கோவில் பகுதியில் 71 வயது ஆண், விநாயகபுரம் பகுதியில் 34 வயது பெண், கள்ளூரில் 32 வயது ஆண், சூராளூரில் 60 வயது ஆண், வேப்பூரில் 52 வயது ஆண், சேத்துவண்டையில் 22 வயது பெண் என மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருப்பத்தூர் தாலுகா குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். காவல் நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது.
தற்காலிகமாக கந்திலி காவல் நிலையத்துக்கு குரிசிலாப்பட்டு காவல் நிலையம் மாற்றப்பட்டது. காவல் நிலையம் அருகே உள்ள அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
கே.வி.குப்பம் தாலுகாவில் ஏற்கனவே 128 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று லத்தேரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தை, 34 வயது பெண், லப்பை கிருஷ்ணாபுரம் மசூதி தெருவைச் சேர்ந்த 70 வயது பெண் ஆகிய 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்று 132 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 பேர் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் பாலாஜி-சுமதி. இவர்களின் மகன் அசோக்குமார் (வயது 18). இவர், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. படித்த பள்ளியில் அவர் முதலிடம் பெற்றார். ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டதே என மனவேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டுக்கு அருகே ஒரு மாந்தோப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் அசோக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவலை கேட்டதும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கொட்டாரமடுகு கிராமத்துக்கு சென்று மாணவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 280 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,383 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதுவரை 1,533 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,191 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,383 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,533 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் நபர்களுக்கு அரிசி, பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடன் பெற்றோருடன் வந்து அரிசி, பருப்பு பொருட்கள் வாங்கி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சத்துணவுத்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 394 பேருக்கு அரிசி, பருப்பு அடங்கிய பை வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு 3 கிலோ அரிசி, 1 கிலோ 200 கிராம் பருப்பு, 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 கிலோ 650 கிராம் அரிசி, 1 கிலோ 250 கிராம் பருப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2020-21-ம் ஆண்டில் ரூ.245 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.907 கோடியே 39 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இதற்கு அரசின் கூடுதல் முதன்மை செயலர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மூலம் 130 சதவீதம் கடன் பெற்று தந்து சாதனை படைத்துள்ளது.
2020-21-ம் ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்திற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.245 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் வங்கிக்கடன் இணைப்பு பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் அதனை சார்ந்த உறுப்பினர்கள் கடன் தொகையினை உரிய தவணைகளில் தவறாமல் செலுத்தி வந்தால், வங்கிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கும். மேலும் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டி முடித்து புதிய கடன்பெற தயார் நிலையில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களும் அதனை சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் மற்றும் நகர்புறங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கிக்கடனை பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வட்டார அளவில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட அலுவலகத்தையும் நேரில் அணுகி பயன்பெறாலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சியிலும், கிராமப் புறங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவமனை, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள ‘கோவிட் கேர்’ சென்டரில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் குடியாத்தம்-காட்பாடி சாலையில் ஒரு தனியார் கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் அமைக்க ஏற்பாடுகளை செய்தார். அங்கு, அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 200 பேர் தங்க வைப்பதற்கான வசதிகள் உள்ளது.
அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் ஷேமன்சூர், தாசில்தார்கள் வத்சலா, சரவணமுத்து, கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், கல்லூரி நிர்வாகி முருகவேல் மற்றும் பலர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா தொற்று பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள், பொதுத்துறை அலுவலகம், தனியார் வங்கிகள், சிவில் சப்ளை அலுவலகம், போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், குடியாத்தம் மார்க்கெட்டில் ஏராளமானோருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 1,200 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய் தாக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. உடல் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். உடல் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக காத்திருக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்படும்.
பொதுமக்கள் சிலர் பாதிப்பு இருந்தாலும் வெளியில் சொல்ல தயங்கி முற்றிய நிலையிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. அதைத் தவிர்க்கும் பொருட்டு பாதிப்பு அறிகுறி தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் முற்றிலும் உயிரிழப்பு தடுக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 100-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். குடியாத்தம் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை. ஊரடங்கால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நிலையை தாண்டி நோய்த்தொற்று அதிகரித்து விட்டது. வியாபாரிகள் தாங்களாகவே விருப்பப்பட்டு கடைகளை அடைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நேற்று நடந்தது
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு காரணமாக அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே படிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து அவற்றின் மூலமாகவும் பாடங்கள் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. பிளஸ்-2 மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று மடிக்கணினியில் பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று இணையதளம் மூலம் மடிக்கணினியில் வீடியோ தொகுப்பை பதிவிறக்கம் செய்ய முயன்றனர். ஆனால் அதில் பல்வேறு சிரமங்கள் காணப்பட்டன. குறிப்பாக ஒரு மடிக்கணினியில் வீடியோ தொகுப்புகள் பதிவிறக்கம் செய்வதற்கு பல மணி நேரமானது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நேற்று நடந்தது. இதனை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வீடியோ தொகுப்புகளை பள்ளி ஆசிரியர்கள் ‘பென்டிரைவ்’ மூலம் காப்பி செய்து, அவற்றை மாணவர்களின் மடிக்கணினியில் சேமித்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அதிகரிகள் தெரிவித்தனர்.

குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தட்டப்பாறை ஊராட்சி ஏரியின்கீழ்பட்டி பகுதியில் 150 பேர் வசிக்கின்றனர். கடந்த ஒருவார காலமாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.