என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் நகராட்சியில் இன்று முதல் 8 நாட்களுக்கு அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
    வேலூர்:

    குடியாத்தம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரித்து வந்தது. தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குடியாத்தம் நகராட்சியில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று தரணம்பேட்டை பஜாரில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க குவிந்தனர். இதனால் குடியாத்தம் நகர் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்த நிலையில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் இன்று முதல் 8 நாட்கள் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு திடீரென ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு கலெக்டர் அறிவித்தார்.

    குடியாத்தம் நகரில் கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதாலும், குடியாத்தம் நகர பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமில்லை என்பதாலும் முழு ஊரடங்கு திடீரென ரத்து செய்யப்பட்டது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காவேரிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    வாலாஜா தாலுகா படியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (வயது 53), விவசாயி. இவர் கடந்த 8-ந் தேதியன்று மனைவியை அழைத்து கொண்டு படியம்பாக்கத்தில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது காவேரிப்பாக்கம் ஏரிக்கரை வழியாக வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் விநாயகத்திற்கு படுகாயம் ஏற்பட்டது. அவரது மனைவிக்கு காயமின்றி தப்பினார். விநாயகம் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து விநாயகம் மகள் ஹேமப்பிரியா காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில் நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. 

    இதற்கிடையில் நளினியின், தாயார்  பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினார். அதில் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி  அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் நளினிக்கு ஒரு மாதம் சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   வேலூர் சிறையில் சிறை விதிகளை மீறிய புகாரில்  நளினிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் நளினிக்கு பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சக கைதி, வார்டனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4,226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,742 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4,226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,742 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளனர். 
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கடிதம் எழுதியுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    நேற்று சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின், தாயார்  பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி  அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    வேலூர் பெண்கள் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சில உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    குடியாத்தம் நகராட்சியில் ஜுலை 24 முதல் 31 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    குடியாத்தம் நகராட்சியில் காய்கறிக் கடை, இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜுலை 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வில்லா முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது-  வர்த்தகர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முழு முடக்கம் அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    குடியாத்தம் பகுதியில் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரியை கொடுத்த பொதுமக்கள், முடிவு காலதாமதமாக வருவதால் அவதிப்படுகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரம், கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறியாக காய்ச்சல், தும்பல், இருமல், சளியால் பாதிக்கப்படும் நபர்களிடம் இருந்து மருத்துவக் குழுவினர் சளி மாதிரியை சேகரித்து கொரோனா தொற்று பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுடன் தொடர் கொண்டவர்களின் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. அதன் முடிவின்படி பாதிக்கப்பட்டவர்களை குடியாத்தம், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    சளி மாதிரியை பரிசோதனைக்காக கொடுத்த பலருக்கு, அதன் முடிவு வர காலதாமதம் ஆவதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பல நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதனால் குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. சமீபத்தில் வேலூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரிசோதனை முடிவு 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும், எனக் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சில நாட்கள் மட்டும் தான் உடனுக்குடன் கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தது. தற்போது மீண்டும் காலதாமதமாக வருகிறது. சளி மாதிரியை கொடுத்த பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே வாக்குவாதத்தில் சிறை காவலர் ஒருவர் தலையிட்டதாலேயே நளினி தற்கொலைக்கு முயன்றதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 
    வேலூர் மாநகராட்சி பகுதியில் வார்டு வாரியாக கொரோனா பரிசோதனை முகாம் இன்று முதல் 6 நாட்கள் நடைபெறுகிறது
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 13-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை 60 வார்டுகளிலும் முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 10 வார்டுகள் வீதம் 6 நாட்களுக்கு 60 வார்டுகளிலும் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஊழியர்கள் அந்தப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்படும் நபர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
    கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால், வேலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் வந்த அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. சென்னையில் இருந்தும், வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் வந்ததால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை எடுத்திருந்தோம். ஆனால் சென்னையில் இருந்தும், வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் வரத்து மேலும் அதிகரித்ததால் வேலூர் மாவட்டத்திலும், குடியாத்தத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

    மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்துக் நடக்க வேண்டும். குடியாத்தம் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகம். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தொற்றால் ஒரு உயிரை கூட இழக்க தயாராக இல்லை எனக் கூறி உள்ளார். அதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்தால், இப்பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கூடுதலாக இருக்கும். இது, அடுத்த மாதம் (ஆகஸ்டு) வரை இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பத்திரப்பதிவு துறையில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாலும், வெளியில் இருந்து பொதுமக்கள் வராததாலும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழக அரசு வருவாய் இழப்பை சமாளித்து வருகிறது.

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுடன் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கம் எனச் சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அதற்கு தகுந்த மாதிரி ஊரடங்கு இருக்கும். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்தால் ஆகஸ்டு மாதம் வரை ஊரடங்கை அமல் படுத்த வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.
    வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 14 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 15-வதாக வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    முன்னதாக இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
    ×