என் மலர்
வேலூர்
வேலூரில் கொரோனாவுக்கு 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்:
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கில்லிரெட்டி ராஜன்நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 79). இவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 20-ந்தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் பலனின்றி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் கோரமண்டல் கே.ஜி.எப். பகுதியை சேர்ந்தவர் நம்மாழ்வார் (75). இவர், கடந்த 27-ந்தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா பரதராமியை சேர்ந்தவர் கனி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (69). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 21-ந்தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 9 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலை அவர் பலனின்றி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புரேந்திரரெட்டி (70), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி புரேந்திரரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம் டவுன் கண்ணகி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனகோட்டி (60). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் தனகோட்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கர்நாடக, ஆந்திர மாநிலம் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5 பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் சமூகசேவகர் ஒருவர் 5 அனாதை உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூகசேவகர் மணிமாறன். இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். மேலும் ஆதரவற்றோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களின் உடல்களை அரசின் அனுமதியுடன் அடக்கம் செய்வதை சேவையாக கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு, விபத்து உள்ளிட்டவற்றில் உயிரிழந்த 2 பெண், 3 ஆண் என்று 5 ஆதரவற்ற முதியவர்களின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் இருப்பது மணிமாறனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அந்த 5 உடல்களையும் அடக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார். இந்த நிலையில் நேற்று வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் 5 அனாதை உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய தயாராக உள்ளேன். அரசு அனுமதி அளித்து உடல்களை கொடுத்தால் அடக்கம் செய்வேன். இந்த பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 225 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர் என்றார்.

குடியாத்தத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கே.சாமிநாதன், தாலுகா செயலாளர் பி.குணசேகரன், தாலுகா தலைவர் நடராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நெடுஞ்செழியன், ராஜா உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து கொரோனா நிவாரண நிதியாக மாதம் தோறும் ரூ.12,500 வழங்க வேண்டும், 60 வயது ஆன அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் தாசில்தார் வத்சலாவிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 126 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது.
வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 108 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,406 ஆக உயர்ந்துள்ளது.
வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வேலூர், குடியாத்தம், காட்பாடி பகுதிகளில் இன்று 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கிளினிக் சீல் வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேலூர், குடியாத்தம் மற்றும் காட்பாடி பகுதிகளில் 10 போலி டாக்டர்கள் பிடிப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள், கிளினிக்கை சீல் வைத்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் ரூ.7 கோடியே 70 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
கொரோனா தொற்று தடுப்பு காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதையொட்டி நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் ரம், விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கி சென்றனர். இதன்காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.1½ கோடி மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.
நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் ரூ.4 கோடியே 70 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.
அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.3 கோடியே 10 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது. ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.7 கோடியே 70 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி திடீரென போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைகள், சி.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காணப்படும் 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
அங்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் சித்த, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அலோபதி முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற 20 பேரை நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்தது. அப்போது அவர்களுடன் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற சிலர் தங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மருத்துவர்கள், 20 பேருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. அதனால் அவர்கள் வீட்டிற்கு செல்கிறார்கள். மற்ற நபர்கள் மேலும் சில நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
அதனை ஏற்காமல் அலோபதி முறையில் சிகிச்சை பெற்ற மற்ற நபர்கள் திடீரென தங்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று குணமடைந்த 20 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மாங்காய் மண்டி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம் அடைந்தன.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை மற்றும் இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதிகபட்சமாக 95.4 டிகிரி வெயில் பதிவானது. மதியம் 2 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் இரும்புத்தகடுகளால் 85 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 25 கடைகளின் இரும்புத்தகடுகள் பறந்து உருக்குலைந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைகள் மழையில் நனைந்தன. காய்கறி கடைகளை பழைய படி நேதாஜி மார்க்கெட்டுக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
சத்துவாச்சாரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள சாலை மற்றும் அப்பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல் கஸ்பா, கொணவட்டம், கன்சால்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் ஓடியது.
மழைநீர் செல்ல கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும் எனப் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் வாகன நிறுத்தும் இடமாக வேலூர் பழைய பஸ் நிலையம் மாறி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
வேலூர் மாவட்டத்தில் வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. வேலூர் புதிய பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்காரணமாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி, கணியம்பாடி, அடுக்கம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
மேலும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களும் இங்கிருந்து தான் புறப்பட்டு சென்றன. தற்போது பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேலூர் நகரில் வசிக்கும் மக்கள் வேலை, மருத்துவமனைக்காக அடுக்கம்பாறை, பாகாயம் உள்ளிட்ட இடங்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்கிறார்கள். அதனால் பழைய பஸ் நிலையம் திருவள்ளூர் சிலை அருகே ஆரணி சாலை வழியாக பாகாயம், அடுக்கம்பாறைக்கு செல்ல ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கும். இந்த ஆட்டோக்கள், மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் நிலையத்தின் உள்ளே வரக்கூடாது என்றும், அதையும் மீறி வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் கடந்த மாதம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது பஸ் நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் நிறுத்தப்படுகின்றன. சில வாகன ஓட்டிகள் பழைய பஸ் நிலையத்தை வாடகை கொடுக்காத வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். காலையில் நிறுத்தப்படும் ஆட்டோ, கார்கள் இரவு நேரத்தில் தான் மீண்டும் அங்கிருந்து எடுத்து செல்கின்றனர்.
இதன்காரணமாக கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை கடையின் முன்பு நிறுத்தி இறக்க முடியாத நிலை காணப்படுகிறது என்று அப்பகுதி கடை வியாபாரிகள் தெரிவித்தனர். பழைய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.
அதையும் மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை என்று பொதுமக்கள், அப்பகுதி கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,132 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 56வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055லிருந்து 1,58,813 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று புதிதாக 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,132 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீதிபதி, டாக்டர் உள்பட 383 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் குறித்த பட்டியல் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று காலை பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரேநாளில் 170 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதன்படி வேலூர் சலவன்பேட்டை, ஓல்டுடவுன், விருதம்பட்டு, காட்பாடி, கழிஞ்சூர், சேண்பாக்கம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 80 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
சத்துவாச்சாரி பாப்பாத்தி அம்மன்கோவில் தெரு, சாவடி தெரு, பள்ளதெரு, ரங்காபுரம் பகுதிகளிலும் தொற்று பரவி உள்ளது. சத்துவாச்சாரி கோர்ட்டில் பணியாற்றும் சார்பு நீதிபதி ஒருவர், காந்தி ரோட்டில் 3 தங்கும் விடுதி ஊழியர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர், போலீஸ் குடியிருப்பில் ஒருவர், கன்டோன்மென்ட் ரெயில் நிலைய ஊழியர்கள் 2 பேர், பென்லேன்ட் மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர், ஜெயில் குடியிருப்பில் ஒருவர், ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் ஒருவர் மற்றும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் பகுதியில் வங்கியில் பணிபுரிபவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,763 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கொரோனா சிறப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் பழகியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,843 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2,112 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.