என் மலர்
செய்திகள்

போலி டாக்டர்கள் கைது
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது
வேலூர், குடியாத்தம், காட்பாடி பகுதிகளில் இன்று 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். கிளினிக் சீல் வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நகரங்களில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வேலூர், குடியாத்தம் மற்றும் காட்பாடி பகுதிகளில் 10 போலி டாக்டர்கள் பிடிப்பட்டனர். அவர்களை கைது செய்த அதிகாரிகள், கிளினிக்கை சீல் வைத்தனர்.
Next Story






