search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனாதை உடல்களை முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திய காட்சி
    X
    அனாதை உடல்களை முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்திய காட்சி

    அனாதை உடல்களை அடக்கம் செய்த சமூகசேவகர்

    வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் சமூகசேவகர் ஒருவர் 5 அனாதை உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூகசேவகர் மணிமாறன். இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆதரவற்ற நபர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். மேலும் ஆதரவற்றோர், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியவர்களின் உடல்களை அரசின் அனுமதியுடன் அடக்கம் செய்வதை சேவையாக கொண்டுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு, விபத்து உள்ளிட்டவற்றில் உயிரிழந்த 2 பெண், 3 ஆண் என்று 5 ஆதரவற்ற முதியவர்களின் உடல்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பிணக்கிடங்கில் இருப்பது மணிமாறனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் அந்த 5 உடல்களையும் அடக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரிடம் அனுமதி பெற்றார். இந்த நிலையில் நேற்று வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் 5 அனாதை உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய தயாராக உள்ளேன். அரசு அனுமதி அளித்து உடல்களை கொடுத்தால் அடக்கம் செய்வேன். இந்த பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 225 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர் என்றார்.
    Next Story
    ×