search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.245 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு- கலெக்டர் தகவல்

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2020-21-ம் ஆண்டில் ரூ.245 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.907 கோடியே 39 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இதற்கு அரசின் கூடுதல் முதன்மை செயலர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு மூலம் 130 சதவீதம் கடன் பெற்று தந்து சாதனை படைத்துள்ளது.

    2020-21-ம் ஆண்டிற்கு வேலூர் மாவட்டத்திற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.245 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் வங்கிக்கடன் இணைப்பு பெற்ற மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் அதனை சார்ந்த உறுப்பினர்கள் கடன் தொகையினை உரிய தவணைகளில் தவறாமல் செலுத்தி வந்தால், வங்கிகள் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வட்டி மானியம் வழங்கும். மேலும் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டி முடித்து புதிய கடன்பெற தயார் நிலையில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளது.

    எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களும் அதனை சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் மற்றும் நகர்புறங்களில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கிக்கடனை பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    வங்கிக்கடன் பெற விரும்புபவர்கள் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வட்டார அளவில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட அலுவலகத்தையும் நேரில் அணுகி பயன்பெறாலம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×