என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 18-ந்தேதி காகிதப்பட்டறை பகுதியில் தூய்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது டாஸ்மாக்கடையின் அருகே உள்ள கடைக்கு லாரியில் இருந்து பிளாஸ்டிக் மூட்டைகள் இறக்கப்பட்டன.

    இதைக் கண்ட மாநகராட்சி அதிகாரிகள் லாரி மற்றும் கடையில் ஆய்வு செய்தனர். அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

    முதற்கட்ட விசாரணையில், புதுச்சேரியில் இருந்து 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு ‘சீல்' வைத்தனர்.

    அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், லாரி உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடந்த 3 மாதங்களாக லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இறக்கப்பட்டது தெரிய வந்தது.

    அதையடுத்து வேலூர் மாநகரில் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்கப்பட்ட கடைகளின் விவரங்கள் பெறப்பட்டன.

    அதில், வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள 3 கடைகளுக்கு அதிகளவு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து கமிஷனர் உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் வேலூர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள 3 கடைகளில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் மட்டும் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அக்கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை இன்று (வியாழக்கிழமை) செலுத்தாவிட்டால் அந்த கடைக்கு ‘சீல்' வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் இருந்து சென்னை பெங்களூரு செல்லக்கூடிய பஸ்கள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    வேலூர்:

    போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

    ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது. கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். விடுமுறை எதுவும் எடுக்க அனுமதி கிடையாது.

    போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடைய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இன்று காலை முதல் இயக்கப்பட்டன. வேலூரில் இருந்து சென்னை பெங்களூரு செல்லக் கூடிய பஸ்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலானவை ஓடவில்லை. தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    திருப்பத்தூர் நகரப்பகுதிகளில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு பஸ்கள் 50 சதவீதத்துக்கு மேல் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 350 தனியார் பஸ்கள் உள்ளன. இந்த தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்பு இல்லை. நகரப் பகுதிகளுக்குச் செல்ல கூடிய பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 30 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்தால் அனைத்து பஸ்களையும் இயக்கலாம். ஆனால் இன்று காலையில் தொழிலாளர்கள் பணிக்கு வராததால் 50 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம் என்றனர்.

    திருவண்ணாமலையில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

    திருவண்ணாமலையில் இருந்து இன்று 45 டவுன் பஸ்களும், 55 ரூட் பஸ்களும் இயக்கப்பட்டன.

    மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்கள் 100 சதவீதமும், ரூட் பஸ்கள் 50 சதவீதமும் இயக்கப்பட்டன. திருவண்ணாமலையில் தனியார் பஸ்கள் இன்று அதிக அளவில் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் ஆட்டோக்களில் பயணம் செய்யும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    டவுன் பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டதால் பள்ளி மாணவ மாணவிகள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் சென்றனர்.
    வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை சத்துணவு ஊழியர்கள் அங்கு திரண்டனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத் தலைவர் சரவணராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் உமாராணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், முழுநேர அரசு ஊழியராக வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு மானியம் உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மதனலோகன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வேலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை சத்துணவு ஊழியர்கள் அங்கு திரண்டனர். அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத் தலைவர் சரவணராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் உமாராணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், முழுநேர அரசு ஊழியராக வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். உணவு மானியம் உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மதனலோகன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 53). விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மகன் வசந்தகுமார் (வயது 23). ராணுவ வீரரான அவர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். குடும்ப பிரச்சினையால் அவரின் வீட்டில் அடிக்கடி வாக்கு வாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். கடந்தசில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தகுமார் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் அருகே சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலுார்:

    வேலூரை அடுத்த மேல்மொணவூர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜோசப் மரியதாஸ் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை இயற்கை உபாதையை கழிக்க சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மெல்மொணவூர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வாழைத்தார் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ஆட்டோ திடீரென ஜோசப் மரியதாஸ் மீது மோதியது.

    இதில், படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஜோசப் மரியதாஸ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 307 பேர் எழுதினார்கள்.
    வேலூர்:

    தமிழக அரசு தேர்வுகள் சார்பில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.) பெறும் தகுதியை நிர்ணயிக்கும் வகையிலான தேர்வு நேற்று நடைபெற்றது.

    வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 2 ஆயிரத்து 439 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    அவர்கள் தேர்வு எழுத வேலூர் சத்துவாச்சாரி, தொரப்பாடி, கணியம்பாடி, சேர்க்காடு, கே.வி.குப்பம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 21 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவு தேர்வும் நடைபெற்றது.

    தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8.30 மணி முதல் வரத்தொடங்கினர். சோதனைக்கு பின்னர் 9 மணி அளவில் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு அறையில் 10 பேர் அமர்ந்து தேர்வு எழுதினர்.

    திறனாய்வு தேர்வை 2 ஆயிரத்து 307 மாணவ-மாணவிகள் எழுதினர். 132 பேர் தேர்வு எழுதவில்லை.

    வேலூர், காட்பாடியில் உள்ள தேர்வு மையங்களை வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பார்வையிட்டார்.

    தேர்வு அறை மற்றும் மையங்களை கண்காணிக்கும் பணியில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    காட்பாடி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி, புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் தனது வீட்டின் பின்புறம் 4 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை 2 பேர் திருடி சென்றனர். அப்போது ஆட்டின் சத்தம் கேட்ட சரவணன் எழுந்து பார்த்து கூச்சலிட்டார். அப்போது 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை சரவணன் பிடித்து விருதம்பட்டு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் லத்தேரி அருகே சோழமூர் கிராமத்தை சேர்ந்த குமார் (32) என்பவதும், தப்பி ஓடியவர் லத்தேரியை சேர்ந்த வைரமுத்து என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய வைரமுத்துவை தேடி வருகின்றனர்.
    கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார்.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுப்படி கணவன்-மனைவி 15 நாட்களுக்கு ஒருமுறை பெண்கள் ஜெயிலில் சந்தித்து பேசி வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஜெயில் கைதிகளை அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், சந்திக்க தடை விதிக்கப்பட்டது.

    அதனால் நளினி-முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் ஜெயில் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் முருகன் கடந்த 3-ந் தேதி வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்த சிறைத்துறை உயர் அதிகாரிகள் முதற்கட்டமாக 30 நிமிடங்கள் இருவரும் நேரில் சந்தித்து பேச அனுமதி அளித்தனர்.

    இந்த நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் நேற்று நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது. ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை வேலூர் ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் வைத்து சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார். இந்த சந்திப்பு காலை 9.35 முதல் 10.05 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    கே.வி.குப்பம் அருகே கணவன் வேறு திருமணம் செய்ததால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் தாலுகா, நாகல் அடுத்த தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஆட்டோடிரைவர். இவருடைய மனைவி பார்வதி (வயது 26). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் வேறுஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் முதல் மனைவி பார்வதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்தநிலையில் பார்வதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பார்வதியின் சாவில் மர்மம் உள்ளதாக அவருடைய தந்தை கோதண்டன் கே.வி.குப்பம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.
    வேலூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன். இவரது மனைவி பவித்ரா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் பவித்ரா மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
    ×