என் மலர்
வேலூர்
- 5 பேர் படுகாயம்
- 4 பேர் கைது
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த ஏரிபட்டரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன்கள் குமாரசாமி, வெங்கடேசன், வடிவேலு உள்ளிட்டோர் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஆடி மாதம் ஆடு வெட்டி சாமி கும்பிட்டுள்ளனர். அந்த விழாவின்போது குமாரசாமி வெட்டிய ஆட்டின் கறியை அண்ணன் தம்பிகள் மற்றும் உறவினர்களுக்கு பங்கிட்டு கொடுத்துள்ளனர்.
ஆட்டுக்கறி பங்கிட்டு கொடுத்ததில் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி இரவு இது சம்பந்தமாக மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டு அண்ணன் தம்பிகள் 2 குழுக்களாக பிரிந்து தடி கத்தி உள்ளிட்டவைகளை கொண்டு சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர்.
இதில் குமாரசாமி (வயது 50). அவரது மகள் ரேவதி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அதே போல் வடிவேலு (43), அவரது மனைவி சுப்புலட்சுமி (33), வடிவேலுவின் தாயார் கிளியம்மாள்(86) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த இரு தரப்பினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் (46) அவரது மகன் சதன்ராஜ்(22) ஆகியோரை கைது செய்தனர் அதேபோல் குமாரசாமி மகன்கள் வயது 17 வயது மற்றும் 16 வயதில் இருவரையும் இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிக்குள் மோதல் ஏற்பட்டு 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் பூங்கொடி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அதிபதி என்ஜினியர் ஜெயக்குமார், தலைமை அதிகாரி ஜெயராம் அமர் பாபு, பொது மேலாளர் சாம்சன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது, தேவையற்ற வயர்களை அகற்றுவது, அறிவிப்பு பலகைகள் மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே கலெக்டர் நேற்று புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள்பகுதியில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஆய்வு செய்துள்ளார்.
- தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்
- மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு
ஜோலார்பேட்டை:
33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 9-ந் தேதி முதல் துவங்கி 11-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற்றது.
ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள்.
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா பிளஸ் 2 பயிலும் மாணவி பங்கேற்றார்.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்கேவிஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேற்று சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் தென்னிந்திய அளவில் ஜூனியர் தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- பஸ் நிலைய கடைகள் ஏலம்
- கோவில் அருகே உள்ள நுழைவாயில் வழியாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தார். மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உடனிருந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது;
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள கடைகளை ஏலம் விடுவது குறித்து மாநகராட்சி முடிவு செய்யும். மேலும் தற்காலிகமாக கடைகள் அமைப்பது குறித்தும் மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள்.
தடுப்பு சுவர் அகற்றப்படும்
பஸ் நிலையம் சுத்தமாக உள்ளது மேலும் சில பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு வெளியே தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கால்வாய் அமைத்து பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்.புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் பாதையில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் முழுவதுமாக அகற்றப்படும்.
காட்பாடி குடியாத்தம் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே வருவதற்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.
- மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வேலூர்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் சமைப்பதற்காக காட்பாடி காந்தி நகர் சத்துவாச்சாரி கஸ்பா ஆகிய இடங்களில் ஸ்மார்ட் சமையலறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்காலிக இடங்களில் தற்போது உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு எப்படி உணவு கொண்டு செல்வது என்பது குறித்து வாகனங்கள் இயக்கி நேற்று பரிசோதிக்கப்பட்டது.
இன்று காலை வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கி சோதனை செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சமையல் கூடத்தில் இருந்து வெண்பொங்கல் தயாரிக்கப்பட்டு 3-வது மண்டலத்தில் உள்ள 19 தொடக்கப் பள்ளிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த பள்ளிகளில் படிக்கும் 1541 பள்ளி குழந்தைகளுக்கு 241.100 கிலோ உணவு பரிமாறப்பட்டது.
வேலூர் மாசிலாமணி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு வழங்கும் சோதனையை மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். முதல்அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு மாநகராட்சியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
- ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
பொன்னை:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 40), டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்றிரவு மணியளவில் பொன்னை பஸ்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை வெட்ட முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறி ஓட்டம் பிடித்தார். ஆனால், அந்த வாலிபர் விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று பாலகிருஷ்ணனை சரமாரி வெட்டினார்.
இதில் கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டு விழுந்ததில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இச்சம்பவத்தால் பொன்னை பஸ்நிலையத்தில் இருந்த பெண்கள் உட்பட பலர் அலறிஓடினர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னை போலீசார் ஹெல்மெட் அணிந்திருந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயன்றனர். அவர் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
போலீசார் விடாமல் பைக்கில் விரட்டி சென்று அந்தவாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த பாலகிருஷ்ணனை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார்
- மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து விடாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பா.ஜ.க.வினர் தடுப்புகளை தாண்டி சென்றனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டது அதையும் தள்ளி உள்ளே புகுந்தனர்.
மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 103 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து இன்று காலை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாநகராட்சியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாரதீய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இதனை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குடியாத்தம் நகர பொதுச்செயலாளர் ஆர். ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் ரூபேஷ், ஒன்றிய பொதுச் செயலாளர் நரசிம்மன், முன்னாள் ஒன்றிய தலைவர் வாழைபிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருட்டை தடுக்க உதவிகரமாக உள்ளது
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அலுவ லகங்கள், மருத்துவ மனைகள், நகை கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்ப ட்டுள்ளன. வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் நடைபெறும் இரண்டு சக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் துப்பு துலங்குவதற்கு கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக உள்ளது.
இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் கண்காணிப்பு கேம ராக்களை சேதப்படுத்தியும் கண்கா ணிப்பு கேமராக்களின் பதிவுகளை பதிவு செய்யும் எந்திரங்களை திருடி செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
குடியாத்தம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் வெளியே நுழைவு வாயிலின் இரு பக்கத்திலும் தலா 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் பள்ளி அமைந்துள்ள பகுதியில் செல்லும் வாகனங்கள் கேமராக்களில் பதிவாகி வந்தது.
நேற்று முன்தினம் இரவு 10 மணி 28 நிமிடம் நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் கையில் கொண்டு வந்த பெரிய கட்டையால் அந்தப் பள்ளியில் நுழைவு வாயிலின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை அடித்து சேதப்படுத்திவிட்டு கண்ணி மைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
கண்காணிப்பு கேமராக்களை சேதப்ப டுத்துவது மறுபுறத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து விடாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பா.ஜ.க.வினர் தடுப்புகளை தாண்டி சென்றனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டது அதையும் தள்ளி உள்ளே புகுந்தனர்.
மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 103 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து இன்று காலை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
- வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று காலைமுருகன் ஜெயிலில் உணவு சாப்பிடவில்லை. 7-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் ஜெயிலில் வக்கீல் புகழேந்தி முருகனை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
வேலூர் சிறையில் இருக்கும் முருகனை சந்தித்தேன். அவர் யாரிடமும் பேசாமல் உணவு உண்ணாமல் "ஜீவ சமாதி" அறநிலை போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார். அதிகாரிகளுக்கு தன்னை விடுதலை செய்ய விருப்பம் இல்லை. தனக்கு போராட உடலிலும் மனதிலும் சக்தி இல்லை என்று எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.
சிறைத்துறை அதிகா ரிகள் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- 200-க்கும் அதிகமானோர் மனு வழங்கினர்
- அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி 36 வது வார்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று செதுக்கரை பகுதியில் நடைபெற்றது.வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
வேலை வாய்ப்பு, வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேசன் அட்டை, செதுக்கரை மலையில் இருந்து பாறைகள் உருள்வதால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான மனுக்கள் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட கதிர் ஆனந்த் எம்பி இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியின் போது குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ம.மனோஜ், முன்னாள் திமுக நகர செயலாளர் மா. விவேகானந்தன் உள்பட அரசு அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






