என் மலர்
நீங்கள் தேடியது "The teenager chased and cut him"
- ரோந்து போலீசார் விரட்டி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
பொன்னை:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 40), டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்றிரவு மணியளவில் பொன்னை பஸ்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை வெட்ட முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறி ஓட்டம் பிடித்தார். ஆனால், அந்த வாலிபர் விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று பாலகிருஷ்ணனை சரமாரி வெட்டினார்.
இதில் கழுத்து உட்பட பல இடங்களில் வெட்டு விழுந்ததில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இச்சம்பவத்தால் பொன்னை பஸ்நிலையத்தில் இருந்த பெண்கள் உட்பட பலர் அலறிஓடினர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னை போலீசார் ஹெல்மெட் அணிந்திருந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயன்றனர். அவர் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
போலீசார் விடாமல் பைக்கில் விரட்டி சென்று அந்தவாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த பாலகிருஷ்ணனை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






