என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய கதிர் ஆனந்த் எம்.பி.
- 200-க்கும் அதிகமானோர் மனு வழங்கினர்
- அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சி 36 வது வார்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று செதுக்கரை பகுதியில் நடைபெற்றது.வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
வேலை வாய்ப்பு, வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேசன் அட்டை, செதுக்கரை மலையில் இருந்து பாறைகள் உருள்வதால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான மனுக்கள் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட கதிர் ஆனந்த் எம்பி இது குறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியின் போது குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ம.மனோஜ், முன்னாள் திமுக நகர செயலாளர் மா. விவேகானந்தன் உள்பட அரசு அதிகாரிகள், திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






