search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 103 பேர் ஜெயிலில் அடைப்பு
    X

    வேலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 103 பேர் ஜெயிலில் அடைப்பு

    • மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க.வினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து விடாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பா.ஜ.க.வினர் தடுப்புகளை தாண்டி சென்றனர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டது அதையும் தள்ளி உள்ளே புகுந்தனர்.

    மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 103 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து இன்று காலை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×