என் மலர்
வேலூர்
- வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு வேளாண்மை துறை சார்பில் சின்னதாமல் செரு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 200 ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச தென்னை மரக்கன்று வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் ஜே.ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை துறை இயக்குனர் விஸ்வநாதன் வேளாண்மை துறை உதவி இயக்குனர் டாக்டர் சுஜாதா ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி பிரியா வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் 200 ரேசன் அட்டைதாரர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர் காயத்ரி, முத்தரசி, சண்முகம், நதியா, உமா, சின்ன பாப்பா, ஜெகநாதன், பைலட் விவசாய சங்க தலைவர் ஜெகநாதன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் அனிதா நன்றி கூறினார்.
- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் பள்ளி மாணவிகள், கிராம மக்கள் பங்கேற்ற ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் கே.சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கோ. துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் வி. கோமதி ஆகியோர் கலந்து கொண்டு ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்கள், ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து மாணவிகளுக்கு விதைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்கள், தொடர்ந்து ஊட்டச்சத்து மாத விழாவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் உதவி மைய அலுவலர் மணி சேகர், திமுக பிரமுகர்கள் ராஜ்கமல், ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வேலூர்:
புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதையொட்டி, திருவண்ணாமாலை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெருமாளுக்கு விரதமிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருப்பதியை நோக்கி பாத யாத்திரை தொடங்கினர்.
வேலூருக்கு வந்த அவர்கள், கோட்டை பூங்காவில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். தொடர்ந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க போகிறோம் என்று கூறி பக்திப்பரவசத்துடன் "கோவிந்தா.. கோவிந்தா... என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடியே ஆன்மிக பாதயாத்திரையை தொடர்ந்தனர்.
- போலீசார் விசாரணை
- ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர்:
வேலூர் கொணவட்டம், சேண்பாக்கம் மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இர வும் அந்த வாலிபர் கொணவட்டம் பெரி யமசூதி அருகே சுற்றியுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வடமாநில வாலிபர், குழந்தையை கடத்தி செல்லும் நபர் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடும் நபராக இருக்கலாம் என்று சந்தே கம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைகளை கட்டி சர மாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வடமாநில வாலிபரை மீட்டு விசாரித்தனர்.
அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த வாலிபர் முத லுதவிக்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலூரில் நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
மின் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாநகர அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல் குடியாத்தத்தில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
- உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்ய வேண்டும்
- கதிர் ஆனந்த் எம்.பி. பேச்சு
வேலூர்:
வேலூர் காட்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் உள்ள 48 பள்ளிகளில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உன்னதமான திட்டம் ஆகும். காலையில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள் உணவு அருந்தாமல் வருகின்றனர். இதனால் 11 மணிக்கெல்லாம் அவர்கள் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இதனால் ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் கற்றல் திறன் இருக்காது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் மாணவர்களின் கல்வி இடை நிற்றல் தவிர்க்கப்படும்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தால் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் ரூ 1000 வழங்கும் திட்டம் சமூக சிக்கலுக்கு தீர்வு காணும் புதுமையான திட்டம்.புதுமைப்பெண் திட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல்.
வேலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ளது. அதனை மாற்றி தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கொண்டு வரப்படும் இவ்வாறு பேசினார்.
இதையடுத்து கதிர் ஆனந்த் எம்.பி பேசுகையில், ஒரு கட்சி தேர்தலில் போட்டியிடும் போது பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். சில கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லை.
ஆனால் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்படாத ஒரு திட்டமாகும். இந்தியாவிலேயே பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான்.
இந்த திட்டம் சிறப்பாக செயல்பட அந்தந்த பகுதி பிரதிநிதிகள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அணைக்கட்டு பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நண்பர்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி சோக முடிவு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யானந்தன். இவரது மகன் இளையராஜா (வயது38 ). வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
இவருக்கு ஆஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களாக குடும்பத் தகராறு காரணமாக இளையராஜா மனைவியை பிரிந்து அசோக் நகரில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் இளையராஜா நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் உங்களை பிரிந்து செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இளைய ராஜாவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர்.
தற்கொலை
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் இளையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற போலீசார், இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளையராஜா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தத்தில் நகர ஒன்றிய திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா சிலைக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் முரளி, துணை செயலாளர்கள் பத்மநாபன் அருணாச்சலம், கல்பனா, பொருளாளர் லிங்கம், மாவட்ட பிரதிநிதிகள், பாபு, சதாசிவம், உள்பட ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகர திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் ஊர்வலத்திற்கு அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அரசு வரவேற்றார். நகர நிர்வாகிகள் ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, முன்னா, பாரி, கோடீஸ்வரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவரும் நகர செயலாளருமான எஸ். சவுந்தரராசன் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
- 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
வேலூர்:
வேலூர் அடுத்த மேல் மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு கட்டுமான பணிக்கான கம்பிகள் சிமெண்டு கலவைகள் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 4 குடியிருப்புகள் வீதம், 55 தொகுப்புகளில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு தெருவசதி, மின்விளக்கு மற்றும் வீடுகளுக்கு இடையேயான இடைவெளி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
3 கட்டுமான நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகளை வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
- சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டு
- வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடந்தது
வேலூர்:
வேலூர் 10-ஆவது பட்டாலியன் என்.சி.சி. படையில் சிறந்து விளங்கிய அலுவலர்கள், மாணவர்களுக்கு தமிழ்நாடு என் சி.சி. துணை இயக்குநரக ஜெனரல் பாராட்டு தெரிவித்தார்.
வேலூர் காட்பாடி காந்தி நகரி லுள்ள 10-ஆவது பட்டாலியனில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படைஅலுவலர்கள், என்சிசி மாண வர்களை பாராட்டும் நிகழ்ச்சி வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடைபெற்றது.
இதில்,தமிழ்நாடு என்சிசி துணை இயக்குநரக ஜெனரல் அடுல்குமார் ரஸ்டோகி பங்கேற்றார். அவருக்குகல்லூரி என்சிசி மாணவர்கள் துப் பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
தொடர்ந்து, என்சிசியில் சிறப் பாக பணியாற்றிய அலுவலர்கள், வேலூர் 10-ஆவது பட்டாலியன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற என்சிசி ஊரீஸ் கல்லூரி மாணவி சத்தியப்பிரியா, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவர் கரண்குமார் ஆகியோருக்கும், முகாமில் சிறந்து விளங்கிய என்சிசி மாணவர்கள் அருண், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கினார்.
சென்னை 'அ' பிரிவு குரூப்கமாண்டர் ஜர்னைல் சிங், காட்பாடி 10-ஆவது பட்டாலிய னின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பணி யாற்றிய பேராசிரியர்களை கவுரவித்தனர். முன்னதாக, கல்லூரியின் நிதி காப்பாளர் எஸ்.கேலப்நோபுள் சந்தர் வரவேற்றார்.
கல்லூரித் தலைவர் ஹெச்.ஷர்மாநித்யானந்தம் கல் லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கல்லூரித் துணை முதல்வர் ஜெ.ஆனிகமலாஃபிளா ரன்ஸ் தொடக்க உரையாற்றினார்.
என்.சி.சி. அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஊரீஸ் கல்லூரி என்சிசி அலுவலர் சி.ஞானலின்ஷைனி நன்றி கூறினார்.
- சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருப்பதால் நடவடிக்கை
- ஜெயில் அதிகாரிகள் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் விதி களை மீறி உண்ணாவிர தம் இருந்து வருவதால் நளினி- முருகன் சந்திப் புக்கு சிறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண் டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார்.
ஆனால் அவர் மீது சிறையில் செல் போன் பயன்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க சிறை நிர் வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் சிறை யில் உள்ள முருகன் கடந்த 8-ந்தேதி முதல் உண்ணா விரதம் இருந்து வருகிறார். கடந்த 11-ந் தேதி முதல் மவுன விரதமும் இருக்கி றார். தொடர்ந்து 8-வது நாளாக முருகன் உண்ணா விரதத்தை தொடர்ந்த தாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது போராடத்தை கைவிட சிறைத்துறை அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால் அவர் பேச்சு வார்த்தையை தவிர்த்து உண்ணார விரத்தை தொடர்ந்து வருகிறார்.
அவரின் உடல் நலத்தை சிறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரு கின்றனர்.
முருகனின் மனைவி நளினி பரோலில் வெளியே வந்து கடந்த 8 மாதங்களாக காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி யுள்ளார். இந்நிலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்ற உத்தரவின்படி முருகன், அவரது மனைவி நளினி சந்திப்பு நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது முருகன் சிறை விதிமுறைகளை மீறி உண் ணாவிரதம் இருந்து வருவதால் நளினியுடனான சந்திப்புக்கு தடை விதிக் கப்பட்டுள்ளதாக வேலூர் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் கேசவேலு, துணைதலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.இ.தியாகராஜன், எஸ். இந்திராகாந்தி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.ஜே.பத்ரிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்ட வழங்கல் அலுவலர் தேவி அனைவரையும் வரவேற்றார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், வேளாண் உதவி இயக்குனர் உமா சங்கர உள்ளிட்ட அதிகாரிகள் திட்ட விளக்க உரையாற்றினார்கள்.
குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்க ட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு 32 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் 109 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, வேளான் உபகரணங்கள், விதைகள் தொகுப்பு வீடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், திமுக பிரமுகர்கள் ஆனந்தன், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் நன்றி கூறினார்.






