என் மலர்
வேலூர்
- கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த கோரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் சாமி ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42) கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் பைக்கில் நேற்று மாலை கோரந்தாங்கள் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி காட்பாடி திருவலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செம்பராயநல்லூர் அருகே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக காட்பாடி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 கிலோ மீட்டர் தூரம் உடல் இழுத்து வரப்பட்டது
- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
வேலூர்:
சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேவூர் பகு தியை தாண்டி வந்து கொண் டிருந்தது.
வாலிபர் சாவு
அப்போது ரெயி லில் சுமார் 30 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் அடிப் பட்டு இறந்தார் . அவரது உடல் ரெயில் என்ஜினில் மாட்டிக்கொண்டது. இதையறிந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை நிறுத்தி உடலை மீட்க முயன்றனர்.
இரவு நேரம் என்பதாலும், உடலை மீட்க முடியாததாலும் அந்த முயற்சியை கைவிட்டனர். பின்னர் ரெயிலை காட் பாடி ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இத னால் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் என்ஜின் முன்பு சிக்கிய உடலுடன் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.
பயணிகள் அதிர்ச்சி
அப்போது ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் என் ஜின் முன்னால் உடல் இருந் ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் சிலர் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் காட்பாடியில் இருந்து 20 நிமிடங்கள் தாமதமாகரெயில் மங்களூரு நோக்கி புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நடந்தது
- கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கவும் வலியுறுத்தல்
வேலூர், செப்.18-
வேலூர் மாநகராட்சி காட்பாடியில் 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் செல்ல ரவுண்டானா முதல் உள்ள பிரதான சாலை உட்பட அனைத்து சாலைகளும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது.
14-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் அலுவலகம் பணிக்கு செல்வோர் வயது முதியவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். குண்டும், குழியுமாக இருக்கும் பிரதான சாலையில் பயணிக்க தினம் தினம் மிகவும் சவாலான செயலாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
மேலும் மழைக் காலங்களில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சிறுசிறு குட்டையாகவும், சேரும் சகதியுமாக உள்ளது.
சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் பொதுமக்கள் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர்,அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை .
மேலும் தனபாக்கியம் கல்யாண மண்டபத்தில் இருந்து சர்க்கார் தோப்பு வரை இணைக்கும் சாலையின் இடையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.பழுதடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்கள் இல்லாத தெருக்களில் கால்வாய் அமைத்து தரவேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுதடைந்த தெரு விளக்குகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயநல்லூர் செல்லும் சாலையில் அப்பகுதி பொது மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- புரட்டாசி மாதம் பிறந்ததால் அசைவ பிரியர்கள் தவிர்ப்பு
- விலையும் கணிசமாக குறைந்தது
வேலூர்:
புரட்டாசி மாதம் பிறந்ததால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கும். வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் குவிவார்கள்.
கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை கணிசமான அளவு குறைந்து உள்ளது.
இருப்பினும் புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி பொதுமக்கள் யாரும் மீன் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டாததால் கடைகளில் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமானோர் மீன் வாங்க வருவார்கள் என வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில் ஆட்கள் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.
இதேபோல் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் இறைச்சி கடைகளும் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
- 20 ஆயிரம் விதைகள் தூவப்பட்டது
- மேயர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் பாலமதி மலையில் ஆக்சிலியம் கல்லூரி சார்பில் 20 ஆயிரம் விதை பந்துகள் தூவும் பணியை மேயர் சுஜாதா தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆக்சிலியம் மகளிர் கல்லூரியின் காட்சிப் புலவியல் துறை மற்றும் கணினி செயல்பாட்டியல் துறை சார்பில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி பாலமதி மலையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். ஆக்சிலியம் கல்லூரி செயலர் ஆலிஸ், முதல்வர் ஜெயசாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணை முதல்வர்கள் சுமதி, அமலா வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விதை பந்து வீசும் நிகழ்வு குறித்து காட்சிப் புலவியல் துறைத் தலைவர் ஜூலியானா விக்டர் விளக்கினார்.
கணினி செயல்பாட்டில் துறை பேராசிரியர் அனிட்டா மெடோனா அறிமுகவுரை நிகழ்த்தினார். காட்சிப் புலவியல்துறைப் பேராசிரியர் ராதிகா வரவேற்றார்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பாலமதி மலையின் பசுமை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 20 ஆயிரம் விதை பந்துகள் தூவும் பணியை மேயர் சுஜாதா தொடங்கி வைத்தார்.
இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விதை பந்துகளை தூவினர். விதை பந்துகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.
- குடோனில் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்
- மினி வேன் பறிமுதல்
வேலூர்:
வேலூர் அடுத்த பொய்கை மோட்டூரில் உள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக விரிஞ்சிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட குடோனில் ஆய்வு செய்ய சென்றனர்.போலீசார் வருவதை. கண்டதும் குடோனில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
இதையடுத்து போலீசார் குடோனில் சோதனை செய்தபோது ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக கட்டி வைத்து கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் ரேசன் அரிசி கடத்துவதற்காக நிறுத்தி வைத்திருந்த மினி வேன் மற்றும் 4 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு வீடாக பணி தீவிரம்
- சனி, ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு பணியாக நடக்கிறது
வேலூர்:
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க வீடு வீடாக சேகரிப்புப் பணி தொடங்கியது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத் தல்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற் காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவம் 6பி-இல் வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற்று கருடா செயலி மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 12,68,725 வாக்கா ளர்களில் இதுவரை 4,99,694 பேர் மட்டுமே ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
மாவட்டத்தில் 39.39 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பணிகளை விரைவாக முடிக்க சென்னை முதன்மைத்தேர்தல் அலுவலர், அரசு முதன்மை செயலர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத் துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் அதனை உடனடியாக இணைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சனி, ஞாயிறு (செப்.17, 18) ஆகிய இருநாள்களிலும் சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு வீடாகச் சென்று, படிவம் 6பி பெற்று கருடா செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறி விக்கப்பட்டிருந்ததது.
அதனடிப்படையில், வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க அலுவலர்களின் வீடுவீ டாக சேகரிப்புப் பணியடில் சனிக்கிழமை ஈடுபட்டனர். இந்த பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி நடவடிக்கை
வேலூர்:
சத்துவாச்சாரி, வேலூர், தொரப்பாடி, துணை மின் மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 20-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என வேலூர் கோட்ட மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையத்தில் வரும் 20-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல், 2 மணி வரை அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்ப டவுள்ளன.
எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சத்துவாச்சாரி பேஸ்-1 முதல் 5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, கலெக்டர் அலுவலகம், ஆவின், நீதிமன்ற வளாகம், இ.பி.நகர், ஆர்.டி.ஓ ரோடு, சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து.
மத்திய சிறை குடியிருப்பு, எழில்நகர், அல்லாபுரம், டோல்கேட், பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், ஆவரம்பாளையம், தொரப்பாடி, நகர், சங்கரன்பாளையம், சாயி நாதபுரம், பலவன்சாத்து குப்பம், விருபாட்சிபுரம், முருகன் நகர், இடையம்பட்டி, ஓட்டேரி, பாகாயம், சஞ்சீவிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.
- பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார்.
- பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் காவலராக வேலை செய்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த போது போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார்.
இந்த சத்தத்தை கேட்ட இளவரசி அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெண்ணுடன் 6 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது.
இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இதுகுறித்து பெண் கூறியதாவது:-
திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தர வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாக கூறினார்.
பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். பிச்சைக்கார பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்த்த சம்பவம் வேலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
- வேலைவாய்ப்புத் திறன் குறித்து விளக்கம்
- ஏராளமானோர் பங்கேற்றனர்
வேலூர்:
மேல்நிலை வகுப் புகளில் தொழிற்கல்வி பாடப் பிரி வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் திறன் புதிய பாடம் தொடர்பாக, வேலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்க ளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் எஸ்எஸ்ஏ அலுவல கத்தில் நடைபெற்ற இந்தப் பயிற் சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் கள் கே.பழனி, செ.நா.ஜனார்த்த னன், க.ராஜா, கா.பா.சிவஞானம், எம்.நாகலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
முது நிலை ஆசிரியர்கள் ஜி.பூபதி, லீலா கிருஷ்ணன், கணினிப் பயிற்றுநர் மா.முருகன் ஆகியோர் பாடப் பொருள்கள் குறித்து விளக்கிப் பேசினர். தொழில்கல்வி மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தொழில் துறை களில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புத் திறன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட் டுக் கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற தொடர்புடைய துறை திறன் கழகங்கள் மூலம் நடைமுறை மதிப்பீட்டுக்கான திறன் சான்றிதழ் ஒவ்வொரு மாணவருக்கும் வழங் கப்படும்.
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2022-ஆம் கல்வி யாண்டிலிருந்து வேலைவாய்ப்பு களை உருவாக்குபவர்களாக உருவாக்குவதே இந்த பாடத்தின் அடிப்படை நோக்கம். இதன்மூலம், மாண வர்கள் தங்களின் பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை அடையாளம் காண முடியும்.
மாணவர்கள் ஆங்கில மொழித் திறன், தகவல் தொடர்புத் திறன், கணினி தகவல் தொடர்பு, தொழில் முனைவோர் திறன், 21-ஆம் நூற்றாண்டுத் திறன்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வர் என்றும் தெரி விக்கப்பட்டது.
முன்னதாக, உதவித் திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம் வரவேற்றார். ப் உதவியாளர் கோபி நன்றி கூறினார்.
- கோட்டை அகழியில் ஒத்திைக
- பருவ மழை தொடங்க உள்ளதால் நடவடிக்கை
வேலுார்:
தமிழகத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை வெளுத்து வாங்கி விட்டது. பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பி வழிகிறது. பல நிரம்பும் சூழலில் உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.
வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது தொடர்பான பயிற்சிகளை போலீசாருக்கு வழங்கும் படி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு ஏ.டி.ஜி.பி. பாலநாக தேவி உத்தரவிட்டார். இதையடுத்து, கடல் சாரா மாவட்டங்களில் போலீசா ருக்கு மீட்பு, முதலுதவி குறித்த பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளிக்கும் பணிகள் 3 நாட்கள் நடக்க உள்ளது.
இதன் அடிப்படையில் வேலுார் மாவட்டத்தில் ஆயுதப்படை மற்றும் சாதா ரண போலீசார் என 60 பேருக்கு பயிற்சிகள் அளிக் கும் பணிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.முதல் நாளான நேற்று முன்தினம் பாதிக்கப்பட் டவர்களுக்கு மீட்டு முதல் உதவி அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 2-வது நாளான நேற்று வெள் ளத்தில் தத்தளித்தவர்களை மீட்பது குறித்து கோட்டை அகழியில் செயல் விளக்க மளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கமாண்டோ பிரிவு வேலுார் பொறுப் பாளர் ஸ்ரீதர் தலைமையி லான குழுவினர் பயிற்சி அளித்தனர்.
- வீட்டில் இருந்தே அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி
- போலியான குறுந் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவ லில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து தினமும் அதிக வருமானம் பெற லாம் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய அந்த பெண் அதிலிருந்த இணைப்பில் தனது விவரங்களைப் பதிவு செய்து கணக்குத் தொடங்கினார்.
அந்த பெண்ணை வாட்ஸ்ஆப், டெலி கிராமில் தொடர்பு கொண்ட நபர் குறிப் பிட்ட இணையதளத்திலுள்ள டாஸ்க்கு களை முடித்து அதிலுள்ள பொருள்களை வாங்கி விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதுடன், செலுத்திய பணத்தையும் திரும்ப பெறலாம் எனக் கூறியுள்ளார்.
அதன் பேரில், அந்தப் பெண்ணும் தொடக்கத்தில் ரூ.200, ரூ.300 அளவுக்கு பணத்தைச் செலுத்தினார். அதற்கு லாபத் துடன் செலுத்திய தொகை திரும்ப அவரது வங்கிக் கணக்குக்கு வந்ததால், அடுத்தடுத்து ரூ.3,000, ரூ.4,000 என பணத்தைச் செலுத்த தொடங்கியுள்ளார்.
ஆனால், அதன் பின்னர், பணம் திரும்ப வரவில்லை. சம்பந்தப்பட்ட நப ரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து டாஸ்க்குகளையும் முடித்தால் மட்டுமே இதுவரை செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் சிறுகச் சிறுக ரூ.5,48,359 வரை பணத்தைச் செலுத்தியும், தனது பணத்தைத் திரும்பப் பெற முடிய வில்லை.
அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த அந்தப் பெண் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் அவர் செலுத்திய தொகை வட மாநிலங்களில் உள்ள வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும், போலியான இணையதளத்தில் நேரடியாக பணத்தைச் செலுத்தியதால், பணம் சென்றடைந்த வங்கிக் கணக்குக ளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இணையவழிக் குற்றங்களில் மோசடி செய்பவர்களின் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் வடமாநிலத்தைச் சேர்ந்தவை என்பதாலும், மோசடி நபர்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை சில நிமிடங்களில் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியோ, ஏதேனும் பொருள்களை வாங் கியோ, பணத்தை வங்கிலிருந்து எடுத்து விடுவதாலோ இவ்வாறான ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை மீட்பது கடினம்.
மேலும், பகுதிநேர வேலை, வீட்டிலிருந்த படி தினமும் வருமானம் பெறலாம், நீங்கள் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களட என போலியான குறுந் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






