என் மலர்
வேலூர்
- மாடுகளின் பின்னால் சென்றதால் சந்தேகம்
- போலீசார் விசாரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
வேலூர்:
காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள ஒரு தெருவில் இன்று காலை சில மாடுகள் சென்று கொண்டிந்தன.
அதன் பின்னால் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர் மாடுகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக அவரை மடக்கி பிடித்து உட்கார வைத்தனர். இது தொடர்பாக காட்பாடி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர் வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. மனநிலை சரியில்லாததால் அவர் மாடுகளின் பின்னால் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கிளித்தான் பட்டறையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு நடந்தது
- தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாட்டாளி தொழிற்சங்க மண்டல செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.தலைவர் தயா கார்த்தி, பொருளாளர் போஜோ முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ இளவழகன், முன்னாள் எம்பி சண்முகம், பாமக மாவட்ட தலைவர் பி.கே. வெங்கடேசன் வக்கீல் பிரிவு சந்துரு, சேகர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். சம்பளம் மற்றும் பென்ஷன் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பிஎப் பண பலன்களை ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு பிறகு சேர்ந்த அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- மாநகராட்சி அலட்சியம் என புகார்
- பைக்கில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், பாலாறு மேம்பாலம், காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் கும்பலாக சுற்றித்திரிவதும், திடீர் திடீரென அவை சண்டையிட்டு நடுரோட்டில் ஓடுவதுமாக உள்ளது. சத்துவாச்சாரி டபுள்ரோடு பகுதியில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் குவிந்து வருகின்றன. அதில் சில காளைகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பைக்கில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. பலர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
மாநகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆனாலும் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் மாடுகள் தொல்லை குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.
'தொடர்ந்து சாலைகளில் கால்நடைகளை சுற்றித் திரியவிட்டால் அபராத தொகை அதிகரிக்கப்படும். கால்நடைகளை திரும்ப ஒப்படைக்க முடியாது' என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார்.
ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார்.
தாட்கோ தலைவர் மதிவாணன் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 76 பேருக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு விஜயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.
- ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது
- போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைக்க உள்ளார்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 கார்கள் உள்பட 37-க்கும் அதிகமாக ரோந்து வாகனங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 6 ரோந்து பைக் போலீசாருக்கு வழங்கப்ப ட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைக்க உள்ளார்.
புதிய வாகனங்-களில் ஜிபிஎஸ் கருவிகள் அலாரம், சைரன், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வேலூர், காட்பாடிக்கு தலா 2 வாகனங்கள் சத்துவாச்சாரி குடியாத்தம் டவுன் பகுதிக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் வேலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
எங்காவது அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ரோந்து வாகனத்தில் செல்லும் போலீசாரை அனுப்பி உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- ரூ.3 ஆயிரம் அபேஸ்
- பார்சலில் ரூ.500 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமே இருந்தது
குடியாத்தம்:
குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 36), கார் டிரைவர். இவரது செல்போனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை செல்போன் மூலம் அழைப்பு வந்தது.
பேசிய பெண் பிரபல செல்போன் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு குறைந்த விலையில் செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர், ஏர்போன் உள்ளிட்டவைகள் வழங்க சந்திரசேகரின் செல்போன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பிரபல நிறுவனத்தின் செல்போன் மற்றும் ஏர்போன், ஸ்பீக்கர் உள்ளிட்டவை அனுப்பி வைப்பதாகவும் , ரூ.3 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி நேற்று மாலையில் குடியாத்தம் விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு கொரியர் அலுவலகத்தில் இருந்து சந்திரசேகருக்கு போன் வந்துள்ளது.
அதில் உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. 3000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதை நம்பிய சந்திரசேகர் அங்கு சென்று ரூ.3 ஆயிரம் செலுத்தி, அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் ரூ.500 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்துள்ளது. செல்போன் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
- மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
- அப்போதுதான் மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி. இவருக்கு உடன்பிறந்த 21 வயதில் அண்ணன் உள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியை அவரது அண்ணன் மிரட்டி பலாத்காரம் செய்தார். தொடர்ந்து தங்கை என்று கூட பார்க்காமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி 3 மாத கர்ப்பமானார்.
மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும்.
- எனது தொகுதியில் கடந்த முறை நான் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளேன்.
வேலூர்:
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகுந்தராயபுரத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரசாரத்தின் போது கூட்டம் ஜெஜெ என்று வருவார்கள். அவர்கள் ஓட்டு போடவில்லை என்றால் அதற்கு கவலைப்பட கூடாது.ஓட்டு போடுவது அவர்களது உரிமை. அவர்களுக்கு நல்லது செய்வது நமது கடமை.
யாராவது நமக்கு தீமை செய்தால் அந்த நபர் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். நீங்கள் வெட்கப்படும் அளவுக்கு நாங்கள் தொண்டு செய்வோம்.
தொகுதி மக்களுக்கு தாயுள்ளத்துடன் பணியாற்றுகிறேன். அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் முதல் அமைச்சர் ரூ.ஆயிரம் கொடுக்கிறார்.
பள்ளிக்கூடத்துக்கு போகும் குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்குகிறார். இரவு சாப்பாடு மட்டும்தான் பெற்றோர் போடணும். அந்த அளவுக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும். எனது தொகுதியில் கடந்த முறை நான் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளேன்.
இந்த முறை நான் அமைச்சர் நான்தான் முடிவு எடுப்பேன். உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும். நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விளக்குகள் இல்லாமல் இருளில் கிடக்கும் சர்வீஸ் சாலை
- பைக்கில் செல்பவர்கள் அவதி
வேலுார்:
வேலூரில் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வியாபாரிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாகனங்கள் வந்து செல்வதில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலுாரில் இருந்து காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் (4 வீலர், 2 வீலர்) கிரீன் சர்க்கிள் சாலையில் செல் வதை தவிர்த்து, நேஷனல் தியேட்டர் சர்க்கிள் அருகில் இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சா லையை அடைந்து, சேண் பாக்கம், ெரயில்வே மேம்பாலத்தின் அடியில் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வழி்யாக காட்பாடி, சென்னை மார்க்கமாக செல்ல வேண்டும்.
சென்னை மார்க்கமாக புது பஸ் ஸ்டாண்டு வரும் வாகனங்கள், காட்பாடி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நுழை வதை தவிர்த்து கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள சர்வீஸ் லைனில் நுழைந்து, சேண்பாக்கம் ெரயில்வே மேம்பா லத்தின் கீழ் திரும்பி புது பஸ் ஸ்டாண்டு வந்து காட்பாடி வழியாக செல்ல வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.
அன்று முதல் அந்த வழியாகத்தான் வாகனங் கள் சென்று வருகின்றன. ஆனால், அங்குள்ள பெட்ரோல் பங்கைத் தா ண்டி சென்றால் போதுமான வெளிச்சம் இல்லை. அங்கு மின் விளக்கு வசதிகள் இல்லாமல் இருட்டாக இருக்கிறது.
ெரயில்வே மேம் பால பகுதி, ஆட்கள் நட மாட்டம் இல்லாமல் குடி மகன்களின் கூடாரமாக இருந்தது. இப்போதும் அந்நிலைமை நீடிக்கிறது.
அந்த வழியாகத்தான் இப்போது வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கும் போதுமான விளக்கு வெளிச்சத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது.
குறிப்பாக பைக்குகளில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அங்கு உடனடியாக போது மான அளவுக்கு விளக்கு வசதிகள் மேற்கொள்ள வேண்டும், போலீஸ் ரோந்து அங்கு அடிக்கடி நடத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்
வேலூர்:
காட்பாடி அடுத்த காங்கேய நல்லூர் களத்து மேட்டு பகுதியில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையம் கட்டப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீரேற்று நிலைய பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று மீண்டும் கழிவு நீரேற்று நிலைய பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று காலை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக நீரேற்று நிலையம் முன்பாக குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பாதாள சாக்கடையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இப்பகுதியில் கழிவு நீரேற்ற நிலையம் அமைக்க கூடாது என தெரிவித்தனர்.
போலீசார் போராட்டம் செய்ய வந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
- வனத்துறையினர் விசாரணை
- கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது.
அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, சிவக்குமார் ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடுகள் மற்றும் கன்று குட்டியை 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிப்பவர் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருவதால்நாய்கள் குரைக்குமாம். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நாய்கள் குறைத்துக் கொண்டே இருந்துள்ளது அப்போது முனிரத்தினம் மற்றும் அவரது குடும்பத்தினர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு சிறுத்தைகள் உலா வருகிறது என இருந்துள்ளனர் சிறிது நேரம் கழித்து நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் அவர்கள் வெளியே வந்து கூச்சல் போட்டுள்ளனர். நாயை சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது தெரியவந்தது உடனடியாக சத்தம் போட்டபடி சென்றபோது நாயின் கழுத்துப் பகுதியில் சிறுத்தை கடித்து கொன்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறையினர் நாயை சிறுத்தை கொன்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுத்தைகள் நாயை இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
- குளிக்க சென்றபோது பரிதாபம்
- விநாயகர் சிலைகள் கரைக்க பள்ளம் தோண்டியது தெரியாமல் சேற்றில் சிக்கினர்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அப்துல்லாபுரம் ரிக்க்ஷா காலனியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன்கள் ஆகாஷ் (வயது 12), ஹரிஷ் (11).இவர்கள் இருவரும் அப்துல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் இமானுவேல் (13). காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவர்களின் தந்தைகள் இருவரும் வேலூரில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள். இந்த நிலையில் சிறுவர்கள் 3 பேரும் அங்குள்ள சாய்பாபா கோவில் பின்புறம் அமைந்துள்ள குட்டைக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.
வீட்டில் இருந்து சென்ற தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களை தேடி சென்ற பெற்றோர், அங்குள்ள குட்டை பகுதியில் கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் இருந்ததை பார்த்தபோது அங்கு தங்களது குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற அச்சத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரில் தேடிய போது ஆகாஷ், ஹரிஷ் இருவரின் உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டது. பதறிப்போன அவர்கள் இருவரையும் தூக்கி கொண்டு பொய்கையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து இம்மானுவேல் உடலையும் மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.3 பேரின் உடல்களையும் பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் 3 சிறுவர்களும் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவர்கள் குளிக்கச் சென்ற குட்டையில் அடிக்கடி அவர்கள் குளித்துள்ளனர். அப்போது அந்த குட்டை ஆழமாக இல்லை. கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் கரைப்பதற்காக அந்த குட்டை ஆழப்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் சிறுவர்கள் குளித்த போது, அதில் இருந்த சேற்றில் சிக்கி இறந்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.






