என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Troubled by cows"

    • மாநகராட்சி அலட்சியம் என புகார்
    • பைக்கில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

    குறிப்பாக அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், பாலாறு மேம்பாலம், காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் கும்பலாக சுற்றித்திரிவதும், திடீர் திடீரென அவை சண்டையிட்டு நடுரோட்டில் ஓடுவதுமாக உள்ளது. சத்துவாச்சாரி டபுள்ரோடு பகுதியில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் குவிந்து வருகின்றன. அதில் சில காளைகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பைக்கில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்படுகிறது. பலர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

    மாநகராட்சி சார்பில் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.

    ஆனாலும் சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் மாடுகள் தொல்லை குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து புகார் அளித்தும் மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

    'தொடர்ந்து சாலைகளில் கால்நடைகளை சுற்றித் திரியவிட்டால் அபராத தொகை அதிகரிக்கப்படும். கால்நடைகளை திரும்ப ஒப்படைக்க முடியாது' என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×