என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்த அண்ணன்
- மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
- அப்போதுதான் மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி. இவருக்கு உடன்பிறந்த 21 வயதில் அண்ணன் உள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியை அவரது அண்ணன் மிரட்டி பலாத்காரம் செய்தார். தொடர்ந்து தங்கை என்று கூட பார்க்காமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி 3 மாத கர்ப்பமானார்.
மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






