என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low cost cell phone"

    • ரூ.3 ஆயிரம் அபேஸ்
    • பார்சலில் ரூ.500 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமே இருந்தது

    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 36), கார் டிரைவர். இவரது செல்போனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை செல்போன் மூலம் அழைப்பு வந்தது.

    பேசிய பெண் பிரபல செல்போன் நிறுவனத்தின் ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு குறைந்த விலையில் செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர், ஏர்போன் உள்ளிட்டவைகள் வழங்க சந்திரசேகரின் செல்போன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பிரபல நிறுவனத்தின் செல்போன் மற்றும் ஏர்போன், ஸ்பீக்கர் உள்ளிட்டவை அனுப்பி வைப்பதாகவும் , ரூ.3 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி நேற்று மாலையில் குடியாத்தம் விநாயகபுரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு கொரியர் அலுவலகத்தில் இருந்து சந்திரசேகருக்கு போன் வந்துள்ளது.

    அதில் உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. 3000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதை நம்பிய சந்திரசேகர் அங்கு சென்று ரூ.3 ஆயிரம் செலுத்தி, அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் ரூ.500 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்துள்ளது. செல்போன் இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    ×