search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிதிராவிடர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்
    X

    அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கிய காட்சி. அருகில் ஆதிதிராவிட நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி ஜவகர், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி., நந்தகுமார் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்

    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்
    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார்.

    ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார்.

    தாட்கோ தலைவர் மதிவாணன் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 76 பேருக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு விஜயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.

    Next Story
    ×