என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு திருடன் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை மடக்கி பிடித்தனர்
    X

    மாடு திருடன் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டவரை மடக்கி பிடித்தனர்

    • மாடுகளின் பின்னால் சென்றதால் சந்தேகம்
    • போலீசார் விசாரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்

    வேலூர்:

    காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள ஒரு தெருவில் இன்று காலை சில மாடுகள் சென்று கொண்டிந்தன.

    அதன் பின்னால் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவர் மாடுகளை திருடி செல்வதாக சந்தேகம் அடைந்தனர்.

    உடனடியாக அவரை மடக்கி பிடித்து உட்கார வைத்தனர். இது தொடர்பாக காட்பாடி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. மனநிலை சரியில்லாததால் அவர் மாடுகளின் பின்னால் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கிளித்தான் பட்டறையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×