என் மலர்
நீங்கள் தேடியது "Auxilium Women's College"
- 20 ஆயிரம் விதைகள் தூவப்பட்டது
- மேயர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் பாலமதி மலையில் ஆக்சிலியம் கல்லூரி சார்பில் 20 ஆயிரம் விதை பந்துகள் தூவும் பணியை மேயர் சுஜாதா தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி ஆக்சிலியம் மகளிர் கல்லூரியின் காட்சிப் புலவியல் துறை மற்றும் கணினி செயல்பாட்டியல் துறை சார்பில் 20 ஆயிரம் விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி பாலமதி மலையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். ஆக்சிலியம் கல்லூரி செயலர் ஆலிஸ், முதல்வர் ஜெயசாந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணை முதல்வர்கள் சுமதி, அமலா வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விதை பந்து வீசும் நிகழ்வு குறித்து காட்சிப் புலவியல் துறைத் தலைவர் ஜூலியானா விக்டர் விளக்கினார்.
கணினி செயல்பாட்டில் துறை பேராசிரியர் அனிட்டா மெடோனா அறிமுகவுரை நிகழ்த்தினார். காட்சிப் புலவியல்துறைப் பேராசிரியர் ராதிகா வரவேற்றார்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பாலமதி மலையின் பசுமை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 20 ஆயிரம் விதை பந்துகள் தூவும் பணியை மேயர் சுஜாதா தொடங்கி வைத்தார்.
இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று விதை பந்துகளை தூவினர். விதை பந்துகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.






