என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் வாட்ஸ்-அப் தகவல் மூலம் ரூ.5.48 லட்சத்தை இழந்த பெண்
- வீட்டில் இருந்தே அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி
- போலியான குறுந் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவ லில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து தினமும் அதிக வருமானம் பெற லாம் எனக் குறிப்பிட்டிருந்தது. இதை நம்பிய அந்த பெண் அதிலிருந்த இணைப்பில் தனது விவரங்களைப் பதிவு செய்து கணக்குத் தொடங்கினார்.
அந்த பெண்ணை வாட்ஸ்ஆப், டெலி கிராமில் தொடர்பு கொண்ட நபர் குறிப் பிட்ட இணையதளத்திலுள்ள டாஸ்க்கு களை முடித்து அதிலுள்ள பொருள்களை வாங்கி விற்பனை செய்து அதிக லாபம் பெறுவதுடன், செலுத்திய பணத்தையும் திரும்ப பெறலாம் எனக் கூறியுள்ளார்.
அதன் பேரில், அந்தப் பெண்ணும் தொடக்கத்தில் ரூ.200, ரூ.300 அளவுக்கு பணத்தைச் செலுத்தினார். அதற்கு லாபத் துடன் செலுத்திய தொகை திரும்ப அவரது வங்கிக் கணக்குக்கு வந்ததால், அடுத்தடுத்து ரூ.3,000, ரூ.4,000 என பணத்தைச் செலுத்த தொடங்கியுள்ளார்.
ஆனால், அதன் பின்னர், பணம் திரும்ப வரவில்லை. சம்பந்தப்பட்ட நப ரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அனைத்து டாஸ்க்குகளையும் முடித்தால் மட்டுமே இதுவரை செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் சிறுகச் சிறுக ரூ.5,48,359 வரை பணத்தைச் செலுத்தியும், தனது பணத்தைத் திரும்பப் பெற முடிய வில்லை.
அதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த அந்தப் பெண் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் அவர் செலுத்திய தொகை வட மாநிலங்களில் உள்ள வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது.
மேலும், போலியான இணையதளத்தில் நேரடியாக பணத்தைச் செலுத்தியதால், பணம் சென்றடைந்த வங்கிக் கணக்குக ளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இணையவழிக் குற்றங்களில் மோசடி செய்பவர்களின் பெரும்பாலான வங்கிக் கணக்குகள் வடமாநிலத்தைச் சேர்ந்தவை என்பதாலும், மோசடி நபர்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை சில நிமிடங்களில் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியோ, ஏதேனும் பொருள்களை வாங் கியோ, பணத்தை வங்கிலிருந்து எடுத்து விடுவதாலோ இவ்வாறான ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை மீட்பது கடினம்.
மேலும், பகுதிநேர வேலை, வீட்டிலிருந்த படி தினமும் வருமானம் பெறலாம், நீங்கள் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களட என போலியான குறுந் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






