என் மலர்
நீங்கள் தேடியது "மழைநீர் தேங்கி சிறுசிறு குட்டை"
- குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நடந்தது
- கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கவும் வலியுறுத்தல்
வேலூர், செப்.18-
வேலூர் மாநகராட்சி காட்பாடியில் 1-வது மண்டலம், 14-வது வார்டுக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் நகர் செல்ல ரவுண்டானா முதல் உள்ள பிரதான சாலை உட்பட அனைத்து சாலைகளும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மிகவும் குண்டும் குழியுமாக இருக்கிறது.
14-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் அலுவலகம் பணிக்கு செல்வோர் வயது முதியவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். குண்டும், குழியுமாக இருக்கும் பிரதான சாலையில் பயணிக்க தினம் தினம் மிகவும் சவாலான செயலாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
மேலும் மழைக் காலங்களில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி சிறுசிறு குட்டையாகவும், சேரும் சகதியுமாக உள்ளது.
சாலையில் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் பொதுமக்கள் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர்,அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மேயர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை .
மேலும் தனபாக்கியம் கல்யாண மண்டபத்தில் இருந்து சர்க்கார் தோப்பு வரை இணைக்கும் சாலையின் இடையில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.பழுதடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்கள் இல்லாத தெருக்களில் கால்வாய் அமைத்து தரவேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழுதடைந்த தெரு விளக்குகளை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கேயநல்லூர் செல்லும் சாலையில் அப்பகுதி பொது மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.






