என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- வேலூரில் நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
மின் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வேலூர் மாநகர அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல் குடியாத்தத்தில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.






