என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
- நண்பர்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி சோக முடிவு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யானந்தன். இவரது மகன் இளையராஜா (வயது38 ). வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தனியார் நிறுவன ஊழியர்
இவருக்கு ஆஷா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களாக குடும்பத் தகராறு காரணமாக இளையராஜா மனைவியை பிரிந்து அசோக் நகரில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் இளையராஜா நண்பர்களுக்கு செல் போனில் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் உங்களை பிரிந்து செல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இளைய ராஜாவின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர்.
தற்கொலை
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் இளையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற போலீசார், இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இளையராஜா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






