என் மலர்
நீங்கள் தேடியது "The gang vandalized the cameras"
- திருட்டை தடுக்க உதவிகரமாக உள்ளது
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அலுவ லகங்கள், மருத்துவ மனைகள், நகை கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்ப ட்டுள்ளன. வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் நடைபெறும் இரண்டு சக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் துப்பு துலங்குவதற்கு கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் மிகவும் உதவிகரமாக உள்ளது.
இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் கண்காணிப்பு கேம ராக்களை சேதப்படுத்தியும் கண்கா ணிப்பு கேமராக்களின் பதிவுகளை பதிவு செய்யும் எந்திரங்களை திருடி செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
குடியாத்தம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் வெளியே நுழைவு வாயிலின் இரு பக்கத்திலும் தலா 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் பள்ளி அமைந்துள்ள பகுதியில் செல்லும் வாகனங்கள் கேமராக்களில் பதிவாகி வந்தது.
நேற்று முன்தினம் இரவு 10 மணி 28 நிமிடம் நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 இளைஞர்கள் கையில் கொண்டு வந்த பெரிய கட்டையால் அந்தப் பள்ளியில் நுழைவு வாயிலின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராக்களை அடித்து சேதப்படுத்திவிட்டு கண்ணி மைக்கும் நேரத்தில் சென்று விட்டனர்.
கண்காணிப்பு கேமராக்களை சேதப்ப டுத்துவது மறுபுறத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






