என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector re-examination"

    • வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    வேலூர்:

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார்.

    அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் பூங்கொடி, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அதிபதி என்ஜினியர் ஜெயக்குமார், தலைமை அதிகாரி ஜெயராம் அமர் பாபு, பொது மேலாளர் சாம்சன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வது, தேவையற்ற வயர்களை அகற்றுவது, அறிவிப்பு பலகைகள் மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்கனவே கலெக்டர் நேற்று புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள்பகுதியில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஆய்வு செய்துள்ளார்.

    ×