என் மலர்
வேலூர்
- உபகரணங்கள் வாங்க அரசு ஆணை
- கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் குழுவாக அமைத்திட வேண்டும்.
குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினர் மிகப்பிற்பட்ட வகுப்பினர்,சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த (ஆண்/பெண்) மக்கள் 10 நபர்கள் கொண்ட குழுவாக வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்கள் பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தேர்வு குழுவினரால் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.
பயனாளிகளுக்கான தகுதிகள்
குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குழாய் பதிக்கும் பணி தீவிரம்
- மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வேலூர்:
வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அருகே உள்ள மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீரை கோட்டை அகழியில் தேக்கி வைத்து உபரி நீரை நிக்கல்சன் கால்வாய் வழியாக வெளியேற்றுமாறு மாற்றினர்.
இதற்காக, கோட்டையின் வடக்கு பகுதியில் உபரி நீர் வெளியேறும் வகையில் பெரிய கால்வாய் கட்டி யுள்ளனர். தற்போதிருக்கும் சாலையில் இருந்து 15 அடி பள்ளத்தில் இருக்கும் இந்த கால்வாய் காலப்போக்கில் தூர்ந்துபோ னதால் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் கோட்டை அகழி நிரம்பியது. உபரி நீர் வெளியேறும் கால்வாய் தூர்ந்து போனதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 10 நாட்களுக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலை இந்தாண்டு மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அகழியில் தேங்கும் நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் ராட்சத நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ள னர். இந்த மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரை கோட்டையின் தென்மேற்கு பகுதியில் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாநகராட்சி நுண்ணுரம் தயாரிக்கும் கிடங்குக்கு அருகே இருக்கும் நிக்கல்சன் கால்வாயுடன் சேர்க்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், கூறும்போது:-
''இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தாலும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது மாநகராட்சி பொறுப்பாக உள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்வு இந்தாண்டும் தொடராமல் இருக்க ரூ.1.90 லட்சம் மதிப்பில் 10 குதிரைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டாரை வாங்கியுள்ளோம். இந்த மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 1.20 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். 10 மணி நேரம் தொடர்ந்து மோட்டாரை இயக்கினால் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற முடியும். மின் மோட்டாரை இயக்க சுமார் 10 கி.வாட் மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டமைப்பை நிறுவ தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும். மின்சாரம் தடை ஏற்பட்டால் 15 கி.வாட் திறன்கொண்ட ஜென ரேட்டரை பயன்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம். தேவை இருந்தால் கூடுதல் மோட்டார் வாங்கவும் தயார் நிலையில் இருக்கிறோம்'' என்றார்.
வேலூர் கோட்டை அமைப்பில் ஜல கண்டேஸ்வரர் கோவில் மட்டும் தாழ்வானப் பகுதியில் அமைந்துள்ளது. கோட்டை மற்றும் கோவில் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் அகழியில் கலக்கும் வகையில் உள்ளது. தற்போதைக்கு, கோவிலில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் இருந்து 2 அடிக்கு கீழே அகழியில் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கோவிலுக்குள் அகழியின் தண்ணீர் உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
- மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
- விரைவாக புறவழிச் சாலை மற்றும் சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை
குடியாத்தம்:
மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் குடியாத்தத்தில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய தொழிலதிபர் ஏ. முகமது அமீன் சாகிப் குடியாத்தம் பகுதியில் பீடி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சா லைகளில் உற்பத்தியாகும் பொருட்களை லாரிகள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் குடியாத்தம் நகரம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மூல பொருட்களை அனுப்பு மிகவும் சிரமமாக உள்ளதால் புறவழிச் சாலையை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்றார்.
தீப்பெட்டி உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள்- இந்தியாவிற்கு தீப்பெட்டிகள் சிவகாசி மற்றும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது சீனாவில் இருந்து லைட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஒரு முறை பயன்படுத்தபடும் லைட்டராகும். இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகிகள் அமைச்சர்கள் மனு அளித்தனர்.
இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்த அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:-
குடியாத்தம் பகுதியில் விரைவாக புறவழிச் சாலை மற்றும் சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு ஆறு மாதங்களுக்குள் சுங்கச்சாவடிகள் அனைத்தும் டிஜிட்டல் மையம் ஆக்கப்படும் அப்போது வாகனங்கள் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறது அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அளவு சுங்க கட்டணம் குறையும் வாகனங்களுக்கு ஆண்டுக்கு காப்பீடு ஆயிரம் முதல் 2000 வரையே அதனை தொடர்ந்து செலுத்த வேண்டும் ஆயுள் முழுவதும் காப்பீடு வசதி செய்தால் அரசுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்றார்.
மத்திய அரசு சீன இறக்குமதி லைட்டர்களுக்கு தடை விதித்துள்ளது இருப்பினும் சட்டவிரோ தமாக இந்தியாவில் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது அதனை தடுக்க கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகள், கோரிக்கைகள் மாநில அரசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
- யார் அவர்? விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த கிங்கினி அம்மன் கோவில் அருகே 38 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் பைக்கில் இருந்து தவறி சாலை ஓரம் விழுந்து கிடந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து யார் அவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 மாடுகள் பிடிக்கப்பட்டன
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
சத்துவாச்சாரி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான மாடுகள் படுத்து கிடக்கின்றன.
மாடுகளை கட்டவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடுகள் சுற்றி திரிவதை அவர்கள் நிறுத்தவில்லை.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமி தலைமையில் வேலூர் அலமேலுமங்காபுரம் முதல் சத்துவாச்சாரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர். மொத்தம் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதில் 4 மாடுகள் மாநகராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டன. 3 மாடுகளின் உரிமையா ளர்கள் அங்கு வந்து விட்டு விடும்படி அதிகாரிகளிடம் கேட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த மாடுகளுக்கு தலா ரூ.2000 விதம் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்து விட்டு மாடுகளை ஒப்படைத்தனர்.
சாலையில் மாடுகளை திரிய விட்டால் அபராதம் விதிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கடும் நெரிசலால் போக்குவரத்து பாதிப்பு
- சத்துவாச்சாரியில் வாகன ஓட்டிகள் திணறல்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ராணிப்பேட்டை மார்க்கமாக வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வர தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னை சில்க்ஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் இறங்கும் வழிப்பாதை மூடப்பட்டுள்ளது. இதனால் சத்துவாச்சாரி ஆவின் அருகில் உள்ள பாதை வழியாக அதிக அளவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் சாலைக்கு வருகின்றன.
இதன் காரணமாக சத்துவாச்சாரியில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் சத்துவாச்சாரி பொதுமக்கள் தற்போது படாத பாடு படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கிடையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு அடிக்கடி ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்த இடத்தில் தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த இரும்பு தடுப்புகளைக் கொண்டு சத்துவாச்சாரியிலிருந்து காகிதபட்டறைக்கு செல்லும் பாதை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் கலெக்டர் அலுவலக சிக்னல் பகுதிக்கு வந்து காகிதப்பட்டறைக்கு திரும்பிச் செல்ல வேண்டி உள்ளது. அந்த இடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
அதே இடத்தில் நின்று போக்குவரத்தை போலீசார் சீரமைத்து வருகின்றனர். ஆனால் ஆஞ்சநேயர் கோவில் முன்பு சாலையை மூடப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை அவர்கள் திறந்து விடவோ அகற்றவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு அவதியை ஏற்படுத்தி உள்ளது. சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கடந்து வர சும்மாவே படாதபாடு படுகிறோம். இது போதாது என்று போலீசார் சாலையை மூடி மேலும் நெரிசல் ஏற்படுத்துகின்றனர்.தடுப்புகளை அகற்றி சாலையை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பிறந்தநாளை முன்னிட்டு வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் உள்ள அன்பு உலகம் தொண்டு நிறுவனம் சார்பில் வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அன்பு உலகம் தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் தலைமை தாங்கினார்.
வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு சுற்று சூழலின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
முன்னதாக நேற்று முன்தினம் வி.ஐ.டி.துணை தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு வெலாசிட்டி மால் வளாகத்தில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மற்றும் பி.வி.ஆர்.திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் காலை முதல் இரவு வரை மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் அன்பு உலக தொண்டு நிறுவன தலைவர் வக்கீல் பி.டி.கே.மாறன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பி.வி.ஆர். திரையரங்க மேலாளர் கலாநிதி, மாறன் அசோசியேட்ஸ் மேலாளர் மணிமாறன் மற்றும் அன்பு உலக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்
- புகை மூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பள்ளிகொண்டா பேரூராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளில் தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகளை தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டு வருகிறது.
அவ்வாறு கொட்டப்படும் மக்காத குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சில நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் தேக்கி வைக்கப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விட்டு செல்கின்றனர்.
அவ்வாறு தீமூட்டும் போது ஏற்படும் புகை மூட்டமானது அருகில் உள்ள சென்னை, பெங்களூர் நெடுஞ்சாலையில் சூழ்ந்து போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் என அச்சமும் நிலவி வருகிறது. மேலும் அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் சென்று துர்நாற்றம் வீசுகின்றது.
எனவே இப்பகுதியில் தீயிட்டுக் கொளுத்தும் சமூக விரோத கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- பழமையான நீர்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டு பழமையான நீர்தேக்க தொட்டியினை அகற்றுமாறு பாஜக கட்சி சார்பில் நேற்று 10- க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
அப்போது அரசு அதிகாரிகளை கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும், சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து அடைத்தும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அணைவரும் கலைந்து செல்லுமாறு அறியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து போக்குவரத்துக்கு வழிவிடாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக அணைக்கட்டு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கவுதம் உட்பட சாலை மறியலில் ஈடுப்பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- டிஎஸ்பி திருநாவுக்கரசு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- சாலைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த மளிகை கடை அதிபர். இவரது மகன் கொணவட்டம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு மாணவன் அதே பகுதியில் உள்ள 10-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றான்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனாலும் மாணவன் கிடைக்கவில்லை.
இரவு 11 மணிக்கு மாணவனின் தந்தைக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். ரூ.1 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். நாங்கள் சொல்கின்ற இடத்தில் பணத்தை கொண்டு வந்து தர வேண்டும் என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டனர். பதறிப்போன பெற்றோர்கள் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
டிஎஸ்பி திருநாவுக்கரசு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வேலூர் மாநகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சாலைகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டது. மீண்டும் மாணவனின் பெற்றோருக்கு போன் அழைப்பு வந்தது. அதில் கொணடவட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூன்று ஆட்டோக்கள் நிற்கின்றன. அதில் நடுவில் உள்ள ஆட்டோ மீது பணத்தை வைத்து விட்டு செல்லுங்கள் நாங்கள் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் எனக் கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார் ஒரு பையில் பணம் போல செங்கற்களை அடுக்கி வைத்து அந்த பையை மாணவனின் தந்தையிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கொணவட்டத்தில் நின்ற ஆட்டோ மீது அந்த பையை வைத்துவிட்டு சென்றார்.
இதனை மறைந்திருந்து போலீசார் நோட்டமிட்டனர். அப்போது மீண்டும் போனில் பேசிய நபர்கள் நாங்கள் காட்பாடியில் இருக்கிறோம் என்றனர். இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் குறித்து விசாரணையில் இறங்கினர்.
அதற்குள் மாணவனின் தந்தைக்கு மீண்டும் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் நாங்கள் தற்போது கொணவட்டம் சதுப்பேரி ஏரி கால்வாய் பகுதியில் மறைந்திருப்பதாக கூறினர். அங்கு வந்து பணத்தை தருமாறு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து போலீசார் கொடுத்த பையுடன் அவரது பெற்றோர்கள் அங்கு சென்றனர்.
பையை வைத்துவிட்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது 7-ம் வகுப்பு மாணவனும் அவரது நண்பர் 10-ம் வகுப்பு மாணவர் இருவரும் அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்கள் வந்து பையை எடுத்த போது பதுங்கி இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
அப்போதுதான் மாணவர்கள் கடத்தல் நாடகமாடி போலீசாரை அலைக்கழித்தது தெரியவந்தது.
இது குறித்து மளிகை கடை அதிபரின் மகன் கூறுகையில்:-
எனக்கு செல்போன் வாங்க வேண்டும் என ஆசை ஏற்பட்டது. எனது பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் வாங்கித் தர மறுத்துவிட்டனர். என் வீட்டில் ஒரு லட்சம் பணம் இருப்பது எனக்கு தெரியும். அதனால் எனது நண்பர் மூலம் கடத்தல் நாடகமாடி பணத்தை பறிக்க திட்டமிட்டோம் என்றார்.
போலீசார் மாணவர்கள் இருவரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
வேலூர்:
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாராம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
- கலெக்டர் பாய்ச்சல்
- தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகளில் எந்த காரணம் கொண்டும் தரம் குறைவாக இருக்கக்கூடாது. தரமாக கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில்:-
மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் பணிகளை கடந்த ஜூலை மாதம் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தற்போது 5 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 144 வீடுகள் ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும் சில வீடுகள் அதனையும் தாண்டி பணிகள் நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையால் கடந்த 5 நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இன்று முதல் மீண்டும் பணிகள் நடக்கிறது.
இதில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். வெளியூர் சென்ற அவர்கள் விரைவில் திரும்புவார்கள். அதன் பிறகு முழுமையாக பணிகள் நடைபெறும். இங்கே சாலை மற்றும் கால்வாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கால்வாய் மற்றும் சாலை வசதிகள் அமைத்து தரப்படும்.
மேலும் ஏற்கனவே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளிலும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உள் நோக்கத்துடன் வதந்தி
வாரம் ஒரு முறை கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்படும். சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்என்றார்.






