என் மலர்
நீங்கள் தேடியது "Chinese lighter"
- மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
- விரைவாக புறவழிச் சாலை மற்றும் சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை
குடியாத்தம்:
மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் குடியாத்தத்தில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய தொழிலதிபர் ஏ. முகமது அமீன் சாகிப் குடியாத்தம் பகுதியில் பீடி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சா லைகளில் உற்பத்தியாகும் பொருட்களை லாரிகள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் குடியாத்தம் நகரம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மூல பொருட்களை அனுப்பு மிகவும் சிரமமாக உள்ளதால் புறவழிச் சாலையை அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என்றார்.
தீப்பெட்டி உற்பத்தி யாளர் சங்க நிர்வாகிகள்- இந்தியாவிற்கு தீப்பெட்டிகள் சிவகாசி மற்றும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது சீனாவில் இருந்து லைட்டர் இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஒரு முறை பயன்படுத்தபடும் லைட்டராகும். இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகிகள் அமைச்சர்கள் மனு அளித்தனர்.
இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்த அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:-
குடியாத்தம் பகுதியில் விரைவாக புறவழிச் சாலை மற்றும் சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு ஆறு மாதங்களுக்குள் சுங்கச்சாவடிகள் அனைத்தும் டிஜிட்டல் மையம் ஆக்கப்படும் அப்போது வாகனங்கள் எத்தனை கிலோமீட்டர் தூரம் செல்கிறது அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அளவு சுங்க கட்டணம் குறையும் வாகனங்களுக்கு ஆண்டுக்கு காப்பீடு ஆயிரம் முதல் 2000 வரையே அதனை தொடர்ந்து செலுத்த வேண்டும் ஆயுள் முழுவதும் காப்பீடு வசதி செய்தால் அரசுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்றார்.
மத்திய அரசு சீன இறக்குமதி லைட்டர்களுக்கு தடை விதித்துள்ளது இருப்பினும் சட்டவிரோ தமாக இந்தியாவில் லைட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது அதனை தடுக்க கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகள், கோரிக்கைகள் மாநில அரசன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






