பா.ஜ.க.வினர் திடீர் மறியல்

போக்குவரத்து பாதிப்பு பழமையான நீர்தேக்க தொட்டியை அகற்ற வலியுறுத்தல்
சாலை மறியலில் ஈடுப்பட்ட பா.ஜ.க.வினர்.
சாலை மறியலில் ஈடுப்பட்ட பா.ஜ.க.வினர்.
Published on

அணைக்கட்டு:

அணைக்கட்டு அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் சுமார் 30 ஆண்டு பழமையான நீர்தேக்க தொட்டியினை அகற்றுமாறு பாஜக கட்சி சார்பில் நேற்று 10- க்கும் மேற்பட்டோர் திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

அப்போது அரசு அதிகாரிகளை கண்டித்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும், சாலையில் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து அடைத்தும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் அணைவரும் கலைந்து செல்லுமாறு அறியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து போக்குவரத்துக்கு வழிவிடாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக அணைக்கட்டு தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கவுதம் உட்பட சாலை மறியலில் ஈடுப்பட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com