என் மலர்tooltip icon

    வேலூர்

    • நாளை நடக்கிறது
    • பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது

    வேலூர்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) நிறுவனம் சார்பில், நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் குறைதீர்வு முகாம் நடக்கிறது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி மாதா கோவில் பின் தெரு, க்ளூனி கான்வென்ட் 14/2, (காமராஜ் ஜூஸ் கடை அருகில்), திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவையில் உள்ளஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் உள்ள, பிளெஸ்ஸோ மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் குறைதீர்வு முகாம் நடக்கிறது. இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை குறைதீர் முகாம் நடக்கிறது.

    இதில், உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலா ளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததா ரர்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியர்க ளுக்கான இணையதள சேவைகள், முதலாளி கள், ஊழியர்க ளுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடர்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பி த்தல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளி களிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், மின்- நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்த தாரர்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.

    • 4 பேருக்கு காயம் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர்-ஆற்காடு சாலை யில் உள்ள காகிதப்பட்டறை டான்சி அருகே சுமார் 200 ஆண்டுகள் பழமையான அர சமரம் ஒன்று இருந்தது. இதன் கீழே விநாயகர் சில வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த மரம் வலுவிழந்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மரம் சாலையில் விழுந்தது. அந்த வழியாக சென்ற 2 பெண் கள் உள்பட 4 பேருக்கு காயங் கள் ஏற்பட்டது.

    மேலும் அங்கு நிறுத்தப்பட் டிருந்த பைக்குகள், ஒரு கார் சிக்கிக் கொண் டது. மின்ஒயர்கள் அறுந்த தால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஒன்றும் சேதமடைந்தது.

    சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சாலை ஓரம் முறிந்து விழுந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கேரளாவில் பலத்த மழை எதிரொலி
    • கூட்டமின்றி வெறிச்சோடியது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்படும். அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்து, ஆர்வத்துடன் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி செல்வார்கள்.

    கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் எதிரொலியாக வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மீன்கள் குறைவாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

    இதில் வஞ்சரம் மீன் ரூ.600 முதல் 900 வரையும், சங்கரா ரூ. 250 முதல் 300 வரையும், நண்டு ரூ.400 முதல் 500 வரையும், ஏரா ரூ.400 முதல் 500 வரையும், கடல் வவ்வா ரூ. 500, அணை வவ்வா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் இன்று கார்த்திகை தீபம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வரும் அசைவ பிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • பக்தர்கள் அவதி
    • இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு ஏறினர்

    வேலூர்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலை தீப திருவிழாவை காண காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு சார்பில் போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் சிறப்பு பஸ்களில் இடம் பிடிக்க பக்தர்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில பஸ் டிரைவர்கள் பஸ்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் அங்கும் இங்குமாக பஸ்களை ஓட்டிச் சென்று பக்தர்களை அலைக்கழித்தனர்.

    கடந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் குழந்தைகளை தவறவிட்டால் எளிதாக கண்டுபிடிக்க புதிய பஸ் நிலையத்தில் போலீசார் அடையாள டேக் கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்கு டேக் கட்டப்படவில்லை.

    • உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 பேர் நேற்று மதியம் ஆட்டோ மூலம் குச்சிபாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு பிராமண மங்களம் வழியாக சென்றனர்.

    ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று பிராமணமங்களம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த வேண்டா, சாந்தி, முருகம்மாள், ராதா, தேவராஜ், சரளா, வள்ளி, கலாவதி, இளவரசன், இளையராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் வேண்டா உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் மிரட்டல் விடுப்பதாக புகார்
    • பாதுகாப்பு கேட்டு சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. பிச்சனூரை சேர்ந்தவர் கணேஷ். இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடிக்கு தமிழ்ச்செல்வி பெற்றோர் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    • சர்க்கரை வியாதியால் அவதியடைந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர், ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 48). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அசோக் குமாருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரது வலது காலில் விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அசோக் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    கடந்த 16-ந் தேதி அசோக் குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது சகோதரி லலிதா, அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒழுங்காக படிக்குமாறு பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பலவநத்தத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஜீவரத்தினம் (வயது 14). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். ஜீவரத்தினம் சரிவர படிப்பில் நாட்டம் செலுத்தவில்லை. ஒழுங்காக படிக்குமாறு அவரது பெற்றோர் ஜீவரத்தினத்தை கண்டித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஜீவரத்தினத்தின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜீவரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்த பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கே.வி. குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீவரத்தினம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன
    • நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட உள்ளது

    வேலூர்:

    கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றியவுடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகள் தூரம் ஒரே நேரத்தில் தீப விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாதீபம் பிரகாசிக்கும் 11 நாட்களும் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அனைத்து இல்லங்களிலும் தீபங்கள் ஒளிரும். இதனையொட்டி திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

    மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமை க்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் அமைக்க ப்பட்டுள்ளன.

    விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கி ன்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கி ற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

    தற்போது மெழுகு விளக்குகள், கலர் களிமண் விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டா டப்படுவதால் கார்த்திகை தீப விளக்குகளை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு புட்டு, கொழுக்கட்டை போன்றவை செய்ய தேவையான பொருட்களும் விற்பனை அதிகரித்து உள்ளது.

    • ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது
    • வியாபாரம் களை கட்டியது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    அதன்படி இன்று வழக்கம்போல் ஒடுகத்தூர் ஆட்டு சந்தை கூடியது. விடியற்காலை 5 மணி முதலே ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு குவிந்ததால், சற்று நெரிசல் ஏற்பட்டது.

    வியாபாரிகளும் போட்டி, போட்டு கொண்டு ஆடுகளை விற்க தொடங்கினர். ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி ரூ.17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சேண்பாக்கம் ரெயில்வே பாலம் அருகே விபத்து
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காலை அரசு கழக பஸ் ஒன்று குடியாத்தம் நோக்கி சென்றது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் முன்பாக சர்வீஸ் சாலையில் பஸ் திரும்பியது.

    அப்போது சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. அப்போது பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பெண் பயணிகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்கள் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர். வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் இடுபாடுகளை சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த லாரி மற்றும் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×