அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு

டிரைவர் கைது திருப்பதி கோவிலுக்கு சென்ற போது விபரீதம்
அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
Published on

வேலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் அதே பகுதி யை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திருப் பதி ஏழுமலையான் கோவி லுக்கு நேற்று பஸ்சில் சென்றார்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வல்லம் டோல்கேட் அருகே சென்ற போது இயற்கை உபாதை களை கழிக்க பஸ்சை நிறுத்தி னர். நல்லம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் நல்லம் மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனை க்காக அடுக்கம்

பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பே ட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நாரா யணபுரம் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் வேணுகோபால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com