என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை ரெயில்கள் தாமதம்- பயணிகள் அவதி
    X

    சென்னை ரெயில்கள் தாமதம்- பயணிகள் அவதி

    • மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
    • அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரெயில் நிலையம் அருகில் இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரெயில், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து தானாபூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அதே போன்று காட்பாடி மார்க்கமாக செல்லும் தானாபூர்-பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில், சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் ஆகியவை காலதாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் காலை 10.20 மணிக்கு சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே திருவலத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பராமரிப்பு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. இது ஏன் என்றும் ரெயில் பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    Next Story
    ×