என் மலர்tooltip icon

    வேலூர்

    • கொய்யா பறிக்க சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில், நடேசன் நேற்று கத்தாரிகுப்பம் அருகே அம்மனூர் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார்.

    அப்போது, தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாருக்கு செல்லும் ஒயரை மிதித்து உள்ளார்.

    அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து நடேசன் தூக்கி வீசப்பட்டார். மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளி அவரது வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விரைந்து வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் நடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், நடேசன் மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் உண்டியலையும் விட்டு வைக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இளங்கோவன்(50), வெங்கடேசன்(50). இவர்கள் இருவரும் ஒடுகத்தூர்-மேல் அரசம்பட்டு சாலையோரம் தனிதனியே அடுக்குமாடிகள் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

    கொள்ளை

    இங்கு மாட்டு தீவனம், ஓட்டல், சலூன், மளிகை, பழக்கடை, டீக்கடை, வெல்டிங் ஷாப், மோட்டர் பழுதுபார்க்கும் கடை உள்ளிட்ட 9 கடைகள் உள்ளது. இந்த கடைகளை அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் இரும்பு ஆயுதங்களால் 9 கடைகளின் ஷட்டர்களை உடைத்து ஒவ்வொரு கடைகளில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதில், மொத்தம் ரூ.1.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது.

    அப்போது, கட்டிடத்தின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியலையும் கடப்பாரையால் உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும், உண்டியலை அருகே உள்ள நிலத்தில் வீசி விட்டனர்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • 1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.
    • உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலுமாக 125 மையங்களில் இந்த நுழைவுத்தேர்வு கணினி முறையில் நடைபெறுகிறது.

    நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 26-ந் தேதி அன்று www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

    வி.ஐ.டி. வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வினை வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார். துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெங்களூரு மையத்தில் நடைபெற்ற நுழைவுத்தேர்வினை பார்வையிட்டார். முதல்கட்ட கலந்தாய்வு 26-4-2023 முதல் 30-4-2023 ரேங்க் 1 முதல் 20,000 வரை, 2-ம் கட்ட கலந்தாய்வு (9-5-2023-11-5-2023) ரேங்க் 20,001 முதல் 45,000 வரை, 3-ம் கட்ட கலந்தாய்வு (20-5-2023-22-5-2023) ரேங்க் 45,001 முதல் 70,000 வரை, 4-ம் கட்ட கலந்தாய்வு (31-5-2023-2-6-2023) ரேங்க் 70,001 முதல் 1,00,000 வரை, 5-ம் கட்ட கலந்தாய்வு (12-6-2023-14-6-2023) ரேங்க் 1,00,000-க்கு மேல் ரேங்க் வரை நடக்கிறது.

    1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.

    மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக். படிப்பு பயிலும் 4 ஆண்டுகாலம் முழுவதும் 100சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    வி.ஐ.டி நுழைவுத்தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1,000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவிகளும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன், அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    • மனு அளிக்க வந்த நிலையில் பரிதாபம்
    • 108 ஊழியர்கள் முதலுதவி அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் மேஷக் (வயது 62). இவர் பெருமுகையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மேஷக் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஊழியர்கள் மேஷாக்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மேஷக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • தரைக்கடைகள் தினசரி வாடகை ரூ.41 ஆக குறைப்பு

    வேலூர்:

    வேலூர் அண்ணா சாலையில் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்து ராஜா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரையில் சாலையோரம் ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர்.

    குறிப்பாக அந்த பகுதியில் உள்ள நடைமேடைகளை தின்பண்ட கடைகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் தினந்தோறும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் வெங்கடேசன் தலைமையில் அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணா சாலையில் நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமித்து எந்த கவித காரணத்தைக் கொண்டும் கடைகள் வைக்கக்கூடாது பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ஏற்கனவே தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    எச்சரிக்கை

    அந்த இடத்தில் பழக்கடைகளை வைக்க வேண்டும் என மீறி சாலைகள் கடை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் இந்த சம்பவத்தால் இன்று காலை அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் தரைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன .இந்த இடத்தில் வியாபாரம் ஆகாததால் வியாபாரிகள் மண்டி தெரு, லாங்கு பஜார் மற்றும் அண்ணா சாலைகளை ஆக்கிரமித்து பழக்கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது சாலைகளில் கடை வைக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் இருந்து தரைக் கடைகளுக்கு தினசரி வாடகை ஒரு 100 வசூலிக்கப்பட்டு வந்தது இந்த கடைகளுக்கு தற்போது தினசரி வாடகை ரூ.41 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு மணி நேரம் நடந்தது
    • பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 22 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 27-ந் தேதி 7 பேர் அங்குள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கிருந்த மின்விசிறி, டேபிள், சேர், டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார். அன்று இரவே அங்கு பணியில் இருந்த வார்டன்களை சரமாரியாக தாக்கி விட்டு சுவரேறி குதித்து தப்பி சென்றனர். போலீசார் அவர்கள் தேடி பிடித்தனர். ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார்

    கடந்த வியாழக்கிழமை 5 சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி சென்றனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகம் அருகே மடக்கிப்பிடித்து ஒப்படைத்தனர்.

    சிறுவர்கள் அடிக்கடி தப்பிச்செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் உதவி கலெக்டர் கவிதா தாசில்தார் செந்தில் டிஎஸ்பி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் இன்று காலை சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சென்றனர்.

    அப்போது அங்குள்ள சிறுவர்களுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர். இது வழக்கமான ஆய்வு தான் என கலெக்டர் தெரிவித்தார்.

    • தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் என்கிற ரெட் (வயது 23). இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23) விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்ராஜ் (28) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாக விரிஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    அதன் அடிப்படையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து ராம்குமார், ரகுவரன், சரண்ராஜ் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்
    • வேலூர் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலர் பதிவு செய்துள்ளனர்.

    தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி அடையாதவர்கள் என்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை நேரில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் வருவாய்துறையினர் சான்றிதழ்களுடன் உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து பணியில் இல்லை என்று சுயஉறுதி மொழி படிவத்தை அளிக்க வேண்டும்.

    அதனுடன் தற்போது வரை புதுப்பித்தல் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் மற்றும் முந்தைய ஆண்டு பெற்ற உதவித்தொகை பரிவர்த்தனையின் பக்கங்கள், போட்டா ஆகியவை இணைக்கப்பட்டு நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இதனை சமர்ப்பிக்க தவறினால் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். உதவித்தொகை பெறும் பயனாளிகள் தங்களது வேலை வாய்ப்பு பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பித்து, அதனை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

    இதனை புதுப்பிக்க தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்து செய்யப்படாது.

    இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது
    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அடுத்த, சப்தலிபுரம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் 2 நாட்களுக்கு முன்பாகவே அமைக்கப்பட்ட யாகசாலையில் 6 கால பூஜைகள் செய்து, யாகங்கள் வளர்க்கப்பட்டது.

    மேலும் அங்கு வைக்குப்பட்டு இருந்த 208 கலசத்திற்க்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசத்தை தலைமீது ஏந்தி மேல தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் மீது அமைந்துள்ள விமான கலச கோபுரத்தின் மீது ஊற்றினர். பின்னர் பக்தர்கள் புனித மீது தெளிக்கப்பட்டது.

    இதன் பின்பு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, அலங்கரித்து தீபாராதனை நடைெபற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி பாலாற்றில் ரசாயன கழிவு பிளாஸ்டிக் கேன்களை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முகழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீ விபத்தை பார்த்த பொதுமக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

    இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் ஆய்வு
    • ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ் சாலையையொட்டி வடுகந்தாங்கல் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக ரூ.30 லட்சத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டி.எம்.கதிர் ஆனந்த் எம். பி. ஒதுக்கி உள்ளார்.

    தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை தாசில்தார் அ.கீதா, ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல் பனா, பெ.மனோகரன், மேலாளர் பா.வேலு, துணை தாசில் தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    மிசோரம் மாநிலம் அய்சால் பகுதியை சேர்ந்தவர் ஜிம்மி லால்சஞ்சுவா (வயது 26). இவரு டைய உறவினர் டேவிட் என்பவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உதவிக்காக உடனிருக்கும் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சா ரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை யில் உள்ள மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி விட்டு தங்கும் விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டப்பையில் வைத்திருந்த ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்ப திந்து விசாரித்தார். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), அருண் (25), அர விந்த் (23) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சித், அரவிந்த் ஆகியோரை கைது செய்து ரூ.1,000 மற்றும் செல்போனை மீட்டனர். மேலும் அருணை தேடி வருகின்றனர்.

    ×