என் மலர்
வேலூர்
- போலீசார் விசாரணை
- எஸ்.பி. ஆபீசில் நடந்த குறைதீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் டிஎஸ்பி இருதய ராஜன் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வேலூர் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்தவர் சத்தியபாமா. இடையன் சாத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இவர் அளித்த மனுவில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் விவசாயம் நிலம் வாங்குவதற்காக பிரவீன் என்பவரிடம் முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுத்தேன் விவசாய நிலம் வாங்குவதில் வில்லங்கம் இருப்பதால் நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன்.
அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளார்.
அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி மனு ஒன்று அளித்தார்.
அதில் எங்கள் பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.
ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து கூட்டிய போது 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தனர்.
ஆனால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வாலிபரின் பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் வாலிபரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்
- ஓய்வூதியம் பெறுவதற்காக சென்ற நிலையில் விபரீதம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (வயது 25).
குமார் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சிலரால் பட்டாசு உடல்முழுவதும் சுற்றி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மலர் தனது 5 வயது மகனை வைத்துக்கொண்டு, கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 17-ந் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக மலைப்பகுதியில் இருந்து அணைக்கட்டு பகுதிக்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு செனறுள்ளார்.
இதன் பின்னர் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
அல்லேரி மலைப்பாதையில் கால்நடைகளை மேய்க்கும் ஒருவர் ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தது யார் என விசாரித்ததில் மலர் என தெரியவந்தது. அவரின் உறவி னர்களுக்கு தகவல் கொ டுக்கப்பட்டு உடலை மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.
மலையடிவாரத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.ஐ.ஜி. உத்தரவு
- வெயில் தாக்கம் அதிகரிப்பால் நடவடிக்கை
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை விசாரணைக்காக அலைக்கழிக்க வேண்டாம் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''நான்கு மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் தாக்கம் உள்ளது. எனவே, கோடை காலங்களில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
போலீஸ் நிலையத்துக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கனிவுடன் வரவேற்று அவர்களை நிழலில் இளைப்பாறச் செய்து அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
வெகு தொலைவில் இருந்து விசாரணைக்காக வருபவர்களை திரும்பத்திரும்ப வரச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் விரைவான நீதி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதியவர்களுக்கு கோடை காலங்களில் தலைசுற்றல், திடீர் மயக்கம் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கும். எனவே, மனித நேயத்தோடு மனுதாரர்களையும் எதிர் மனுதாரர்களையும் விசாரணை செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காக்கை, குருவி போன்ற பறவைகள் நீரின்றி அலையும் அவலத்தை தவிர்க்க சிறு, சிறு மண் குவளைகளில் நீர் ஊற்றி போலீஸ் நிலையங்களை சுற்றியுள்ள இடங்களில் திறந்த வெளிகளில் வைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- நகர மன்ற தலைவர் அடிக்கல் நாட்டி ெதாடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சமையல் கூடம் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கலந்துகொண்டு புதிய சமையல் கூடத்திற்கான கட்டிடப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர், திமுக மாணவர் அணி துணை மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் சுந்தர், திமுக வர்த்தக அணி நகர அமைப்பாளர் ஆர்.ஜி.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்
- வனத்துறையினர் போராடி பிடித்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் வளாகத்தில் உள்ள பள்ளி கட்டிடங்களை சுற்றி நிறைய செடி கொடிகள் புதர்கள் உள்ளன பள்ளி வளாகத்தை ஒட்டியபடி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலையில் பள்ளி வகுப்பு தொடங்கும் முன் பள்ளி ஜன்னல் வழியே ஒரு பாம்பு வகுப்பறைக்குள் உள்ளே புகுந்தது. இதனை கண்ட பள்ளி ஊழியர் உடனடியாக அந்த அறையை பூட்டி விட்டார் அப்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களும் அந்த பாம்பை பார்த்து அச்சமடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சிமெண்ட் அலமாரியின் இடுக்கின் வழியே உள்ளே மறைந்திருந்தது பாம்பை வனத்துறையினர் அரை மணி நேரம் போராடி பிடித்தனர்.
பாம்பு பிடிக்கப்பட்ட வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் மீண்டும் அமர்ந்து பாடங்களை படிக்கவும் தேர்வு எழுதவும் அச்சமடைந்தனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தனி கவனம் செலுத்தி இப்பள்ளியில் உள்ள செடி கொடிகளை அகற்றியும் புதர்களை அகற்றியும் தூய்மை பணியை செய்து தருமாறு மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
- தீயை அணைப்பது குறித்து விளக்கம் அளித்தனர்
குடியாத்தம்:
வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள், ஆட்டோ ஆகியோரிடம் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தொடர்ந்து வீடு மற்றும் பணி செய்யும் இடங்கள், வாகனங்களில் தீப்பற்றினால் அதிலிருந்து பாதுகாப்பாக மீள்வது குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர்.
- கும்பாபிஷேக விழா ஜூன் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
- யாகபூஜை ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் 4-வது கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவதற்காக 13 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், உட்பிரகாரங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த 16 கலசங்கள், சாமி, அம்பாள் சன்னதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில் உள்ள 16 கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசுவதற்காக அவை அங்கிருந்து மாற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு விரைவில் அவை கோபுரங்களில் பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கோவில் செயலாளர் சுரேஷ் கூறுகையில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகபூஜை ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 25-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.
கோவில் கோபுர கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசப்பட்டு அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்பட உள்ளது. சினிமா தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தங்கத்தேர் செய்து கோவிலுக்கு வழங்க உள்ளார். இதற்கான பணிகள் கோசாலையில் நடைபெற்று வருகிறது என்றார்.
- ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் (மின்னூர்) ெரயில்வே கேட்டின் வழியாக கல் குவாரி லாரிகள் 24 மணி நேரமும் செல்கிறது.
இந்த ெரயில் பாதை ஓரு மணிநேரத்தில் 3 ெரயில்கள் செல்கின்றன. இதனால் ெரயில்வே கேட் தினசரி அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு முறை திறந்து மூடும் போது காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் கேட் திறந்தும் வரிசையில் 20 லாரிகள் போட்டி போட்டு கேட் வழியாக சென்று வரும் போதும் ஓரு சில நேரங்களில் ெரயில் பாதை தண்டவாளத்தில் லாரி சிக்கிய போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நேற்று இரவு இது போன்று ஒரு சம்பவம் நடந்தது லாரிகள் மீது ெரயில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாராயம் விற்பதாக ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் பாம்பு களிப்பள்ளியை சேர்ந்த பூபேஷ் (வயது 25 (தாமோதரன் வயது 30 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவின்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வேலூர் சிறையில் உள்ள பூபேஷ் தாமோதரன் ஆகியோரிடம் வழங்கினர்.
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்தவர்கள் செம்மலை, நிஜந்தன்.
இவர்கள் 3 பேரும் நேற்று இரவு அப்துல்லா புரத்தில் இருந்து மேல்மொணவூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஒரே பைக்கில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பைக் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனுஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் செம்மலை, நிரஞ்சன் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- தீ தொண்டு நாளையொட்டி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 10 கிலோ மீட்டர் தொலைவு மாரத்தான் போட்டி நடந்தது.
இதையடுத்து இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது.
ஊர்வலத்தை தீயணைப்புத்துறை வடக்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். வேலூர் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தீயணைப்புத் துறையினர் என்சிசி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- வரும் ஜுன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது
- அனைத்து தரப்பினரும் உதவி அளிக்கலாம்
வேலூர்:
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவிலில் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவதுகும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது.
கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் இன்று கழற்றி கீேழ கொண்டு வரப்பட்டது. இதனை புதுப்பித்து தங்க முலாம் பூசும்பணிகள் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.






