search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murder of a young woman"

    • 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்
    • ஓய்வூதியம் பெறுவதற்காக சென்ற நிலையில் விபரீதம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மலர் (வயது 25).

    குமார் கடந்த 4 வருடத்திற்கு முன்பாக சிலரால் பட்டாசு உடல்முழுவதும் சுற்றி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மலர் தனது 5 வயது மகனை வைத்துக்கொண்டு, கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 17-ந் தேதி ஓய்வூதியம் பெறுவதற்காக மலைப்பகுதியில் இருந்து அணைக்கட்டு பகுதிக்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு செனறுள்ளார்.

    இதன் பின்னர் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    அல்லேரி மலைப்பாதையில் கால்நடைகளை மேய்க்கும் ஒருவர் ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தது யார் என விசாரித்ததில் மலர் என தெரியவந்தது. அவரின் உறவி னர்களுக்கு தகவல் கொ டுக்கப்பட்டு உடலை மலைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    மலையடிவாரத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர்கள் யாரோ தலையில் கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
    • அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி வேலுநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40), தனியார் நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி (வயது 35) , இவர்களுக்கு 10 வயதில் பலசத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அடித்து கொலை

    இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கணவரை தேடிய போது தலைமறைவானது தெரிய வந்தது. அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் சென்னைக்கு தப்பியோடிய அவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் மனைவி தரக்குறைவாக பேசியதால் அவரை அடித்து கென்றதாக கூறி உள்ளார்.

    பரபரப்பு வாக்குமூலம்

    மேலும் போலீசாரிடம் அவர்அளித்த வாக்கு மூலத்தில்கூறி இருப்பதா வதுதனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் நான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி புரிந்து வருகிறேன். ஆனால் எனது மனைவி டெய்லரிங் வேலை பார்த்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். இதனால் அவர் என்னை மதிப்பதில்லை. அடிக்கடி என்னை கேவலமாகவும், அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் திட்டுவார். மேலும் எனது தந்தை பெயரில் உள்ள சொத்துகளையும் பிரித்து வாங்கி வருமாறு கூறுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    நேற்று முன்தினம் இரவும் இதே போல எங்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் தூங்க சென்றார். ஆனால் அவர் கே வலமாகவும், அசிங்கமாகவும் பேசியதால் எனக்கு தூக்கம் வராமல் தவித்தேன், இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்த நான் தூங்கி கொண்டிருந்த எனது மனைவியை கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×