என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவருடன் கார்த்திகை செல்வி.
சேலத்தில் இளம்பெண் கொலை என்னை மதிக்காமல் தரக்குறைவாக பேசியதால் அடித்துக் கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
- அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார்.
- அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி வேலுநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40), தனியார் நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகை செல்வி (வயது 35) , இவர்களுக்கு 10 வயதில் பலசத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அடித்து கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்திகை செல்வி தலையில் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கணவரை தேடிய போது தலைமறைவானது தெரிய வந்தது. அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திகை செல்வியை கட்டையால் அடித்து கொன்று விட்டு ராஜசேகரன் தலை மறைவானது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை யிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். பின்னர் சென்னைக்கு தப்பியோடிய அவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் மனைவி தரக்குறைவாக பேசியதால் அவரை அடித்து கென்றதாக கூறி உள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
மேலும் போலீசாரிடம் அவர்அளித்த வாக்கு மூலத்தில்கூறி இருப்பதா வதுதனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் நான் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணி புரிந்து வருகிறேன். ஆனால் எனது மனைவி டெய்லரிங் வேலை பார்த்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். இதனால் அவர் என்னை மதிப்பதில்லை. அடிக்கடி என்னை கேவலமாகவும், அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் திட்டுவார். மேலும் எனது தந்தை பெயரில் உள்ள சொத்துகளையும் பிரித்து வாங்கி வருமாறு கூறுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்.
நேற்று முன்தினம் இரவும் இதே போல எங்களுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் தூங்க சென்றார். ஆனால் அவர் கே வலமாகவும், அசிங்கமாகவும் பேசியதால் எனக்கு தூக்கம் வராமல் தவித்தேன், இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்த நான் தூங்கி கொண்டிருந்த எனது மனைவியை கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






