என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு A snake entered the classroom"

    • செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்
    • வனத்துறையினர் போராடி பிடித்தனர்




    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அரசினர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளியின் வளாகத்தில் உள்ள பள்ளி கட்டிடங்களை சுற்றி நிறைய செடி கொடிகள் புதர்கள் உள்ளன பள்ளி வளாகத்தை ஒட்டியபடி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்நிலையில் நேற்று காலையில் பள்ளி வகுப்பு தொடங்கும் முன் பள்ளி ஜன்னல் வழியே ஒரு பாம்பு வகுப்பறைக்குள் உள்ளே புகுந்தது. இதனை கண்ட பள்ளி ஊழியர் உடனடியாக அந்த அறையை பூட்டி விட்டார் அப்போது பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களும் அந்த பாம்பை பார்த்து அச்சமடைந்தனர். 

    உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து சிமெண்ட் அலமாரியின் இடுக்கின் வழியே உள்ளே மறைந்திருந்தது பாம்பை வனத்துறையினர் அரை மணி நேரம் போராடி பிடித்தனர்.

    பாம்பு பிடிக்கப்பட்ட வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் மீண்டும் அமர்ந்து பாடங்களை படிக்கவும் தேர்வு எழுதவும் அச்சமடைந்தனர். 

    மாவட்ட நிர்வாகம் உடனடியாக தனி கவனம் செலுத்தி இப்பள்ளியில் உள்ள செடி கொடிகளை அகற்றியும் புதர்களை அகற்றியும் தூய்மை பணியை செய்து தருமாறு மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×