என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுர கலசங்களில் தங்க முலாம் பூசும் பணி தீவிரம்
    X

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சீரமைப்பதற்காக ராஜகோபுரத்தில் இருந்து கலசங்கள் கீழே இறக்கப்பட்ட காட்சி.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுர கலசங்களில் தங்க முலாம் பூசும் பணி தீவிரம்

    • வரும் ஜுன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது
    • அனைத்து தரப்பினரும் உதவி அளிக்கலாம்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவிலில் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவதுகும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

    கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது.

    கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் இன்று கழற்றி கீேழ கொண்டு வரப்பட்டது. இதனை புதுப்பித்து தங்க முலாம் பூசும்பணிகள் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×