என் மலர்
வேலூர்
- டைனோசரின் சத்தத்தை நவீன தொழில்நுட்பத்தில் கேட்க முடியும்
- 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன
வேலூர்:
வேலூர் அரசு அருங்காட்சியகம் கடந்த 1985-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நகர அரங்கில் (டவுன் ஹால்) சிறிய அளவில் தொடங்கப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையிலான கற்சிற்பங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்த முக்கிய அரசு அலுவலகங்கள் வெளியேறிய நிலையில் கோர்ட்டு வளாகமாக செயல்பட்ட கட்டிடம் அரசு அருங்காட்சியகத்துக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, 8 பிரிவுகளுடன் கூடிய அரசு அருங்காட்சியகமாக கடந்த 1998-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
பின்னர், 1999-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அரசு அருங்காட்சியகமாக செயல்பட தொடங்கியது. அத்துடன், பார்வையாளர்களை கவரும் வகையில் அரசு அருங்காட்சியகம் முன்பாக டைனோசர் பொம்பை பெரியளவில் வைக்கப்பட்டது.
இன்றளவும் வேலூர் அரசு அருங்காட்சியகத்தின் அடையாளமாகவே டைனோசர் பொம்பை இருந்து வருகிறது. ஏறக்குறைய 24 ஆண்டுகள் கடந்த நிலையில் வேலூர் அரசு அருங்காட்சியகம் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அதன்படி, வேலூர் அரசு அருங்காட்சியகம் திருவண்ணாமலையில் இருப்பதுபோன்று நவீன விளக்கு வசதிகள், குளு குளு ஏசி வசதியுடன் கூடிய அரங்குகளுடன் முப்பரிமாண காட்சிகள் அடங்கிய கூடம் மற்றும் டைனோசரின் நவீன காட்சியமைப்பு மற்றும் ஊடாடும் தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்த அரங்குக்கு செல்லும்போது டைனோசரின் சத்தத்தை நவீன தொழில்நுட்பத்தில் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அரசு அருங்காட்சியக அதிகாரிகள் கூறும்போது, ''வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் 1,400 ஆண்டுகள் பழமையான பொருட்களுடன் கூடிய கற்சிற்பக்கூடம், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் இருக்கும் முந்து வரலாற்றுக்கூடம், 1,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் அடங்கிய படிமக்கூடம், 200 ஆண்டுகள் பழமையான போர் வாள்கள், பீரங்கிகள் உள்ளன. அத்துடன் ஓவியக்கூடம், இயற்கை அறிவியல் கூடம், நாணயவியல் கூடம், மானுடவியல் கூடம், மாவட்ட சுற்றுலாத்தலங்கள் கூடம் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அரசின் புதிய அறிவிப்பால் இந்த அருங்காட்சியகம் நவீனமயமாவதுடன் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அரசு அருங்காட்சியகத்துக்கு வருவார்கள்'' என்றனர்.
- மனைவி பிரிந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமண மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 26). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இதையடுத்து இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் நவின்குமாரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவின்குமாரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 100 நாள் வேலை திட்டத்தின் போது விபரீதம்
- உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை
அணைக்கட்டு:
தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை செய்து வருகின்றனர்.
இதில் வழக்கம் போல் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ராதிகா (வயது 29)என்பவர் வேலை செய்து கொண்டு இருந்தார். வேலை செய்யும் இடத்தில் யாரோ மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து அப்பகுதியில் வீசி சென்றுள்ளனர். இதனை கவனிக்காத ராதிகா அதை மிதித்துள்ளார்.
இதனால் அவர் காலில் பாட்டிலின் கண்ணாடி ஆழமாக குத்தி நரம்பை அறுத்து உள்ளது.
இதனால் வலியால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த ராதிகாவை சக பணியாளர்கள் மீட்டு வேலூர் தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும், அவரின் வாழ்வாதாரமே இழந்து தவிக்கும் வேளையில் அதிகாரிகள் இதனை அலட்சியம் காட்டுவதாகவும் கூறி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது
- பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது
வேலூர்:
வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் மற்றும் ஜெர் மனி நிறுவனமான இ.ஓ.எஸ். (3டி பிரிண்டிங்) அமைப்புடன் இணைந்து புதிதாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்ப பயிற்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் என்.ரமேஷ், துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன், முதல்வர் எம்.ஞான சேகரன், இ.ஓ.எஸ். ஜெர்மனி நிறுவனத்தின் இந்திய இயக்கு னர் பிரகாசம் ஆனந்த், மேலாளர் தனசேகரன், அடிட்டிவ் லோனிங் இயக்குனர் சாலமன் பாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியானது மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதுடன் திறன்மேம்பாட்டை வளர்ப்பதற்கான தாகவும், சுயதொழில் செய்வதற்கான அடிப்படை பயிற்சி யாகவும் அமையும். இ.ஓ.எஸ். ஜெர்மனி நிறுவனமானது பாலிடெக்னிக் கல்லூரி அளவில் தமிழ்நாட்டில் முதன் முறை யாக ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் அதற் கான கட்டமைப்பை உருவாக்குகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
3டி தொழில்நுட்பமானது இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேலூரில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக நிற்கும்
- கதிர்ஆனந்த் எம்.பி. பேச்சு
வேலூர்:
காட்பாடி தொகுதி தி.மு.க. சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று நடந்தது.
காட்பாடி தி.மு.க. பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கதிர் ஆனந்த் எம்.பி. கலந்துகொண்டு தனது சொந்த பணத்தில் இஸ்லாமியகர்கள் 3 ஆயிரம் பேருக்கு ரம்ஜான் பொருட்கள் தொகுப்பான பிரியாணி அரிசி, எண்ணெய், நெய் ரூ.200 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, தி.மு.க. எப்போதும் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து துணை நிற்கும்.
அதனால் தான் ரம்ஜானுக்காக பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சுனில் குமார் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், ஒன்றிய செயலாளர் சரவணன், பகுதி செயலாளர் பரமசிவம் கவுன்சிலர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டில் தபால் அலுவலகம் முற்றுகை
- போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு
அணைக்கட்டு:
அணைக்கட்டில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 5 குழந்தைகள் உட்பட 150 பேர் காங்கிரஸ் கட்சியினர் கைது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அணைக்கட்டு பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
இதில் 5 சிறுகுழந்தைகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- வேலூர் கோட்டை காந்தி சிலை அருகே நடந்தது
வேலூர்:
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் பூமி மாசடைந்து வருகிறது மேலும் ஆங்காங்கே வீசப்படும் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று காலை வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பாக தொடங்கியது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியத்து தொடங்கி வைத்தார்.
காந்தி சிலை முன்பாக இருந்து மக்கான் சிக்னல் அண்ணா சாலை வழியாக சென்று பெரியார் பூங்கா அருகே நெடுவ நிறைவடைந்தது. பேரணியில் மாநகராட்சி ஊழியர்கள் தனியார் தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் தன்னார்வலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பதவிகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா கமிஷனர் ரத்தினசாமி மாவட்ட சுற்றுச்சூழல் இயக்குனர் ரவிச்சந்திரன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினியர்கள் சுஷ்மிதா மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் ஜெயில் அதிகாரிகள் தகவல்
- காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனை
வேலூர்:
வேலூர் ஜெயில் அருகே சிறைத்துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெயில் அங்காடி திறக்கப்பட்டது. இதில் காய்கறி, மீன்கள் விற்கப்பட்டன. இதன் அருகே நவீன முடிதிருத்தகம் மற்றும் திறந்தவெளி உணவகம் திறக்கப்பட்டது.
அழகான புல் வெளியுடன் அமைக்கப்பட்ட திறந்த வெளி உணவகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் நிர்வாக குளறுபடியால் இவை அனைத்தும் மூடப்பட்டன. ஜெயில் எதிரே புல்வெளியுடன் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ஏற்கனவே உணவகம் இருந்த இடம் புதுப்பிக்கப்படுகிறது.அந்த இடத்தில் புதியதாக காம்பவுண்ட் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.
திறந்தவெளி உணவகத்தில் காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். கைதிகளால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் மற்ற இடங்களை விட குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படும்.
விரைவில் உணவகம் திறக்கப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்பு
- வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன் வரவேற்று பேசுகையில்:-
2017-18-ம் ஆண்டில் 400 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளி அனைவரின் உழைப்பினால் இன்று 2,200 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநா தன் கலந்து கொண்டு பள்ளியில் இந்த ஆண்டு கல்வி தொடர் புடைய இணை செயல்பாடுகளில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும், மாஸ்டர்ஜீ-யில் பயின்று பல்வேறு உயர்ப டிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரொக்கத்தொகை, பரிசு, கோப்பைகள் வழங்கினார். அவர் பேசுகையில், பள்ளி கல்வியின் வளர்ச்சி மற்றும் தரம் ஒரு நாட்டின் உயர்கல்வியில் வளர்ச்சி, தரத்தையும் நிச்சயம் உயர்த்தும்.
மேலைநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் கல்விக்கு செலவு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
வி.ஐ.டி.யில் கடந்த ஆண்டு படித்த அனைத்து மாணவர்களும் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்ற. னர். 84 நாடுகளில் வி.ஐ.டி. மாணவர்கள் வேலை செய்கிறார்கள். விரைவில் ஸ்பிரிங்டேஸ் பள்ளியை இந்தியா திரும்பி பார்க்கும் நிலை நிச்சயம் வரும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்க ளுக்கு வி.ஐ.டி. சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.
விழாவில் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதில், பள்ளி துணை முதல்வர் சில்லிசுக் கலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேஸ் பள்ளிக்கல்வி இயக்குனர் ரம்யா சிவக்குமார் செய்திருந்தார்.
- உடல்நல குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்களம் பகுதியில் வசித்து வந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 56) இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கரும்பு ஆலை கொட்ட கையில் சவுந்தர்ராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுந்தராஜன் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் சம்மந்தமான நோய் இருந்து வந்ததாகவும் இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் உடல் நிலை சரியாகாததால் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் கூறினர்.
- வேலூரில் தடுப்பு வைத்து கண்காணிப்பு
- தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 18 இடங்கள் உட்பட 53 விபத்துகள் நிகழும் இடங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் சித்தூர்-கடலூர் நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் சில இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.
வேலூர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை அருகே கிரீன் சர்க்கிளுக்கு இறங்கும் இடத்தில் நெடுஞ்சாலையில் கடந்த 15 நாட்களில் குறைந்தது 3 விபத்துகள் நடந்துள்ளன.
வேகமாக வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் எஸ்பி எஸ்.ராஜேஷ் கண்ணன் கூறுகையில்:-
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நேர நெரிசலில் விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.
மாவட்டத்தில் ஜனவரி முதல் இதுவரை நடந்த 257 விபத்துகளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் பெரும்பாலானவை மாலை நேர நெரிசலில் நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன.
விபத்துகளைத் தடுக்க, விஐடியுடன் இணைந்து போலீசார் நடத்திய ஆய்வில், 53 இடங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை போன்ற தேசிய நெடுஞ்சாலைகளில், விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் விபத்துகளைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.தற்போது, மாவட்டத்தில் 460 கி.மீ., தூரம், தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தடுக்க ெநடுஞ்சாலைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படும் ஒவ்வொரு இடமும், குறிப்பாக மாலை நேரங்களில், குறைந்தது 2 போலீஸ்காரர்களால் நிர்வகிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் ஸ்பீடு டிடெக்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
விபத்து ஏற்படும் பெரும்பாலான இடங்கள் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன, அவை எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி , மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள்.
தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-
தமிழக முதல் - அமைச்சரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். காலை உணவு திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.இடைநிற்றல் இதன் மூலம் குறைந்துள்ளது என்றார்.
இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.






