என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான் பொருட்கள்"

    • தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக நிற்கும்
    • கதிர்ஆனந்த் எம்.பி. பேச்சு

    வேலூர்:

    காட்பாடி தொகுதி தி.மு.க. சார்பில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி மற்றும் பொருட்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இன்று நடந்தது.

    காட்பாடி தி.மு.க. பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கதிர் ஆனந்த் எம்.பி. கலந்துகொண்டு தனது சொந்த பணத்தில் இஸ்லாமியகர்கள் 3 ஆயிரம் பேருக்கு ரம்ஜான் பொருட்கள் தொகுப்பான பிரியாணி அரிசி, எண்ணெய், நெய் ரூ.200 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது, தி.மு.க. எப்போதும் இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து துணை நிற்கும்.

    அதனால் தான் ரம்ஜானுக்காக பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குகிறோம் என்றார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் சுனில் குமார் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், ஒன்றிய செயலாளர் சரவணன், பகுதி செயலாளர் பரமசிவம் கவுன்சிலர் அன்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×