என் மலர்
நீங்கள் தேடியது "Jail officials inform"
- வேலூர் ஜெயில் அதிகாரிகள் தகவல்
- காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனை
வேலூர்:
வேலூர் ஜெயில் அருகே சிறைத்துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெயில் அங்காடி திறக்கப்பட்டது. இதில் காய்கறி, மீன்கள் விற்கப்பட்டன. இதன் அருகே நவீன முடிதிருத்தகம் மற்றும் திறந்தவெளி உணவகம் திறக்கப்பட்டது.
அழகான புல் வெளியுடன் அமைக்கப்பட்ட திறந்த வெளி உணவகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் நிர்வாக குளறுபடியால் இவை அனைத்தும் மூடப்பட்டன. ஜெயில் எதிரே புல்வெளியுடன் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக ஏற்கனவே உணவகம் இருந்த இடம் புதுப்பிக்கப்படுகிறது.அந்த இடத்தில் புதியதாக காம்பவுண்ட் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது.
திறந்தவெளி உணவகத்தில் காலை டிபன், மதியம் வெரைட்டி சாதம் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். கைதிகளால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் மற்ற இடங்களை விட குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படும்.
விரைவில் உணவகம் திறக்கப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






