என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் கட்சியினர் கைது"

    • ராகுல் காந்தி கைது, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி ெரயில்வே நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    அப்போது அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் சார்பில் ெரயில் தண்டவாளம் அருகே சென்று ரெயிலை மறிக்க ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் காங்கிரஸ் கட்சியினரை ெரயில் நிலையத்திற்குள் உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸ் சாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்று அதே பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று ராகுல் காந்தி கைது, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நடராஜன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்தப் போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ெரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,

    • அணைக்கட்டில் தபால் அலுவலகம் முற்றுகை
    • போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 5 குழந்தைகள் உட்பட 150 பேர் காங்கிரஸ் கட்சியினர் கைது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து அணைக்கட்டு பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதனையடுத்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

    இதில் 5 சிறுகுழந்தைகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    ×