என் மலர்
வேலூர்
- விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்
- வீடுகளுக்குள் முடங்கிய கிராம மக்கள்
குடியாத்தம்:
ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.
யானைகள் அட்டகாசம்
யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது.விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
நேற்று அதிகாலை 2 யானைகள் வி.டி.பாளையம் ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே புகுந்தது.
இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர். அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.
யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து மாமரங்கள், கேழ்வரகு, நெற் பயிர்களை நாசம் செய்தது இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.
இதனையடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் விரட்டியதில் விவசாயி சுந்தர்ராஜ் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.
கிராம மக்கள், விவசாயிகள் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
குற்றச்சாட்டு
வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை .காலையில் வந்து சேதம் அடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டு செல்கின்றனர் ஆனால் இரவில் தினம்தோறும் உயிருக்கு அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம் அலட்சியத்துடன் செயல்படும் குடியாத்தம் வனத்துறையினர் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
சைனகுண்டா, பரதராமி, கொட்டாளம் ஆகிய 3 இடங்களில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது.இந்த சோதனை சாவடிகள் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது.
இந்த சோதனை சாவடிகளில் பணியாற்றும் வனத்துறையினர் சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யாமல் பணம் வசூலிப்பது குறியாக உள்ளனர்.அதில் காட்டும் அக்கறை, யானைகளை விரட்டுவதில் காட்டுவதில்லை என குற்றம் சாட்டினர்.
- ரூ.3.50 லட்சம், 5 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் சோதனையில் சிக்கினர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரியார் நகரில் காசு வைத்து ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குடியாத்தம் டவுன் பெரியார் நகர் 3-வது தெருவில் சூதாட்டம் நடந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு காசு வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
கும்பலில் இருந்த 19 பேரை கைது ெசய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் பணம், 5 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்ட கும்பல் அப்பகுதியில் எப்போதில் இருந்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூதாட்ட கும்பல் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயிலில் அடைத்தனர்
- வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் நடவடிக்கை
வேலூர்:
வேலூர் ஓல்ட் டவுன் உத்திர மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் என்கிற விக்கி (வயது 25). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு சம்பந்தமாக விக்னேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
விக்னேஷ் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையின் பேரில் விக்னேஷை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை ஜெயிலில் உள்ள விக்னேஷிடம் போலீசார் கொடுத்தனர்.
- 3 இடங்களில் தினமும் தண்ணீர் வைத்து வருகின்றனர்
- காக்கைகள் தண்ணீர் குடிப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்
குடியாத்தம்:
கோடை காலத்தை கருத்தில் கொண்டு பறவைகளின் தாகம் தீர்க்க ேபாலீஸ் நிலையங்களில் பறவைகளுக்காக பாத்திரங்களில் தண்ணீர் வைக்குமாறு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அறிவுறுத்தினார்கள்.
உயரதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா உள்ளிட்ட போலீசார் காவல் நிலைய வளாகத்தில் பறவைகள் தாகம் தீர்க்க 3 இடங்களில் தினமும் தண்ணீர் வைத்து வருகின்றனர்.
வெயில் நேரத்தின் போது தினந்தோறும் காக்கைகள் தேடி வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானைகளில் தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்கிறது.
காக்கைகள் தண்ணீர் குடிப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
- அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்
- குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி இரவு பிரசவ வார்டுக்குள் அத்துமீறி மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
அவர் கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ய முயன்றுள்ளார் அப்போது அந்த கர்ப்பிணி பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் அந்த மர்மநபரை பிடித்தனர் குடியாத்தம் டவுன் போலீசில் அவரை ஒப்படைத்தனர்.
அவர் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சுகுமார் (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரசவ வார்டுக்குள் அத்துமீறி நுழைந்து கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏ ற்படுத்தியது.
இந்த வழக்கில் ெஜயிலில் உள்ள சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார் கலெக்டர் நேற்று சுகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
- பறக்கும் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே மூலைகேட் பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரமுடைய வேலாடும் தணிகைமலை பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பெருவிழா நடைப்பெற்றது.
வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. பாலமுருகன் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளி தெய்வானை அம்பாளை அழைத்து வந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து வழிப்பட்டனர்.
இதனை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் மருதவல்லிப்பாளையம் முதல் வேலாடும் தனிகைமலை வரை சுமார் 5 கி.மீ தூரம் நேர்த்திக்கடனாக பறக்கும் காவடிகள் ஏந்தி முதுகில் அழகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித் தொழிலாளி.
கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ராஜா சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் தப்பி ஓடிவிட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 56 வயது நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது
- மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார்
வேலூர்:
ஆன்லைனில் பண மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் புரிதல் இல்லாத வயதனாவர்களை மோசடிகாரர்கள் குறிவைக்கின்றனர்.
அவர்களும் எளிதாக விழுந்துவிடுகின்றனர். எனவே, ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவ னம் அவசியம்.
வாட்ஸ் அப்பில் நூதன முறையில் வேலூரை சேர்ந்தவரிடம் ரூ.4 லட்சம் பறித்து மோசடி செய்துள்ளனர்.இவரை வித்தியாசமான முறையில் வலையில் சிக்கவைத்துள்ளனர்.
வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் வைத்திருந்த செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது.
அதனை நம்பி அவர் அதில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளார். தொடர்ந்து அதில் காட்டப்பட்ட பல்வேறு பொருட்களை வாங்கினால் லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அதில் கொடுக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தி 22, 617 செலுத்தினார்.
இதனை தொடர்ந்து பணத்தை எடுக்க முயன்ற போது முடியவில்லை.
அப்போதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
- மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி குடியாத்தம் பணமடங்கியில் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மாடுகள் திருடு போய் வருகிறது.
இது குறித்து அந்தந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல் கிராமப்புற பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டி வைக்கப்படும் மாடுகளை அவிழ்த்து சென்று ஆந்திர மாநில சந்தேகங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பனமடங்கி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த சில விவசாயிகள் ஆந்திர மாநிலம் பலமநேரில் நடைபெற்ற மாட்டு சந்தையில் மாடு வாங்க சென்றனர்.
அப்போது பனமடங்கியில் திருடு போன மாடுகள் அங்கு விற்பனைக்கு நிறுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விவசாயிகள் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பலமனேர் மாட்டுச்சந்தைக்கு சென்றனர்.
அங்கு மாடுகளை விற்பனைக்கு வைத்திருந்த கும்பல் மாடுகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு வாலிபர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். திருடு போன 4 மாடுகளில் 3 மாடுகளை போலீசார் மீட்டனர். மாட்டு சந்தையில் சிக்கிய வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் மாடு திருடும் கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது
- பலருக்கு வேலை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
மேலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு பெரும் வகையில் மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமை அன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று காலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பரமேஸ்வரி தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளிம் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர்.
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களை அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க சில நிறுவனங்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் பலருக்கு வேலை வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தருகிறார்களா என சோதனை
- பொதுமக்கள் குப்பைகளை பிரித்து தருகிறார்களா என சோதனை மாநகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர்.
மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்து தார் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை காட்பாடி 1+வது மண்டலத்திற்கு உட்பட்ட 3-வது வார்டில் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் முறையாக குப்பைகளை சேகரிக்கிறார்களா, பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தருகிறார்களா என ஆய்வு செய்தார்.
மேலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களிடம் இனி மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் கணேஷ், 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.






