என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலாடும் தணிகை மலையில் கிருத்திகை விழா
- பறக்கும் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே மூலைகேட் பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரமுடைய வேலாடும் தணிகைமலை பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பெருவிழா நடைப்பெற்றது.
வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
பக்தர்கள் கூட்டம் வந்தவண்ணம் இருந்தது. பாலமுருகன் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வள்ளி தெய்வானை அம்பாளை அழைத்து வந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து வழிப்பட்டனர்.
இதனை தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் மருதவல்லிப்பாளையம் முதல் வேலாடும் தனிகைமலை வரை சுமார் 5 கி.மீ தூரம் நேர்த்திக்கடனாக பறக்கும் காவடிகள் ஏந்தி முதுகில் அழகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story






