என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது
- பலருக்கு வேலை வழங்கப்பட்டது
வேலூர்:
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.
மேலும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு பெரும் வகையில் மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமை அன்று தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று காலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் உதவி இயக்குனர் பரமேஸ்வரி தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளிம் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர்.
இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களை அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க சில நிறுவனங்கள் அழைப்பு விடுத்தனர். மேலும் பலருக்கு வேலை வழங்கப்பட்டது.






