என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- மனைவி பிரிந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமண மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 26). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இதையடுத்து இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் நவின்குமாரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் அவர் மன உளைச்சலில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவின்குமாரின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.