என் மலர்

  வழிபாடு

  ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுர கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்படுகிறது
  X

  கலசங்கள் புதுப்பிப்பதற்காக மாற்றும் பணி நடந்தபோது எடுத்த படம்.

  ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுர கலசங்கள் தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தப்படுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கும்பாபிஷேக விழா ஜூன் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
  • யாகபூஜை ஜூன் 21-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

  வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் 4-வது கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவதற்காக 13 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரங்கள், கட்டிடங்கள், உட்பிரகாரங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்த நிலையில் கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்த 16 கலசங்கள், சாமி, அம்பாள் சன்னதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில் உள்ள 16 கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசுவதற்காக அவை அங்கிருந்து மாற்றும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் மதுரையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு விரைவில் அவை கோபுரங்களில் பொருத்தப்பட உள்ளது.

  இதுகுறித்து கோவில் செயலாளர் சுரேஷ் கூறுகையில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகபூஜை ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூன் 25-ந் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

  கோவில் கோபுர கலசங்களை புதுப்பித்து தங்க முலாம் பூசப்பட்டு அவை விரைவில் அதே இடத்தில் வைக்கப்பட உள்ளது. சினிமா தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தங்கத்தேர் செய்து கோவிலுக்கு வழங்க உள்ளார். இதற்கான பணிகள் கோசாலையில் நடைபெற்று வருகிறது என்றார்.

  Next Story
  ×