வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு

மனு அளிக்க வந்த நிலையில் பரிதாபம் 108 ஊழியர்கள் முதலுதவி அளித்தனர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் மேஷக் (வயது 62). இவர் பெருமுகையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மேஷக் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஊழியர்கள் மேஷாக்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மேஷக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com