குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது

தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை ஜெயிலில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
Published on

வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் என்கிற ரெட் (வயது 23). இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23) விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்ராஜ் (28) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாக விரிஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து ராம்குமார், ரகுவரன், சரண்ராஜ் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com